புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

சிவகார்த்திகேயனின் இமேஜ் டேமேஜ் ஆனாலும் கைவசம் இருக்கும் 5 படங்கள்.. பொங்கலுக்கு தயாரான அயலான்

Sivakarthikeyan in Upcoming Movies: கொஞ்சம் பிரபலம் ஆகி விட்டாலே அவர்களை சுற்றி பிரச்சனைகளும் சர்ச்சைகளும் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்துவிடும். அப்படித்தான் சிவகார்த்திகேயன் சமீபத்தில் இமான் மனைவி பிரச்சினையில் மாட்டிக் கொண்ட விஷயம் பூதாகரமாக வெடித்தது. இதனை தொடர்ந்து பல நெகடிவ் விமர்சனங்கள் சிவகார்த்திகேயன் மீது குவிந்தது.

ஆனாலும் இதெல்லாம் சினிமாவில் சாதாரணம் என்பதற்கு ஏற்ப அனைத்தையும் துடைத்து போட்டு நடிப்பில் மட்டும் கவனத்தை செலுத்தி தற்போது ஐந்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அந்த வகையில் எப்பொழுது தான் இந்த படம் வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் குழந்தைகளுக்கு பொங்கல் ட்ரீட்டாக அயலான் படம் நாளை திரையரங்குகளில் ரிலீஸ் ஆகப் போகிறது. இதனுடைய டிரைலரை பார்க்கும் பொழுது கண்டிப்பாக சிவகார்த்திகேயனுக்கு வெற்றி நிச்சயம் என்பது போல் உறுதியாகிவிட்டது.

அடுத்ததாக சிவகார்த்திகேயனின் 21வது படத்தை கமலஹாசன் தயாரித்து, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கப் போகிறார். இவர் ஏற்கனவே ரங்கூன் படத்தை இயக்கி வெற்றியடைந்திருக்கிறார். அந்த வகையில் இப்படத்தின் கதையானது ஒரு ராணுவ வீரரின் பயோபிக் கதையாக இருக்கப் போகிறது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார்.

Also read: ஒரே மீமிஸ்-ல சிவகார்த்திகேயன் மானத்தை வாங்கிய மில்லர்.. தனுசை பார்த்து பயந்த அயலான்

இதனைத் தொடர்ந்து இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கமிட்டாகி இருக்கிறார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன் ஏஆர் முருகதாஸ் கடைசியாக தர்பார் என்கிற படத்தை ரஜினிக்கு வெற்றியாக கொடுத்தார். அதற்குப் பிறகு சிவகார்த்திகேயன் கூட்டணியில் இணையப் போகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத கடைசியில் ஆரம்பிக்கப் போகிறது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சீதாராம் படத்தின் மூலம் பிரபலமான மிருணால் தாக்கூர் நடிக்கப் போகிறார்.

அடுத்ததாக கடந்த வருடம் குடும்பத்துடன் பார்த்து என்ஜாய் பண்ணும் அளவிற்கு ஒரு படத்தை கொடுத்து அனைவரது மனதையும் கவர்ந்த குட் நைட் படத்தின் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார். இவருடைய வித்தியாசமான கதையும், சிவகார்த்திகேயனின் எதார்த்தமான நடிப்பும் ஒன்று சேர்ந்து ஒரு வெற்றி படத்தை கொடுக்கப் போகிறார்கள்.

இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. தற்போது விக்னேஷ் சிவன், பிரதிப்பை வைத்து வைத்து LIC படத்தை பிசியாக எடுத்து வருவதால் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு சிவகார்த்திகேயனுடன் இணையப் போகிறார். இப்படி தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று இவர் மீது ஏற்பட்ட தவறான விமர்சனத்தை மறக்கடித்து வெற்றியை நோக்கி பயணித்து வருகிறார்.

Also read: கற்பனைக்கு எட்டாத இயற்கையின் பரிசு.. ஏலியன் துணையோடு வரும் சிவகார்த்திகேயன், வைரலாகும் அயலான் ட்ரெய்லர்

Trending News