வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

மக்கள் செல்வன் சொதப்பிய 5 படங்கள்.. கெட்டப்ப மாத்தி மாட்டிக்கொண்ட ஜுங்கா

5 films of Vijay Sethupathi which failed to hit commercially: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் எடுத்த எடுப்பிலேயே நடிகராக அறிமுகமாகவில்லை.சிறு சிறு வேடங்களில் தோன்றி தொலைக்காட்சியில் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பங்கேற்று கார்த்திக் சுப்புராஜ் உடன் கைகோர்த்து சில குறும்படங்களில் நடித்து அதன் மூலம் திரையில் தனது அடையாளத்தை பதித்தவர் விஜய் சேதுபதி. தனது திறமையின் மூலம் மக்கள் செல்வன் என்ற பட்டத்தை  தட்டிக் கொண்டவர். நாம நடிச்சாலே வெற்றி பெற்று விடும் என்று தப்பு கணக்கு போட்டு சொதப்பிய ஐந்து படங்களை காணலாம்,

லாபம்: சமூகத்திற்கு தேவையான உயரிய சிந்தனையுடன் விவசாயத்தை முன்னெடுத்து லாபத்தை கருத்தில் கொள்ளாமல் விஜய் சேதுபதியே தயாரிப்பாளராக களத்தில் இறங்கிய படம் லாபம்.  இயக்குனரின் இழப்பால் சொல்ல வந்த திரை கதையை சொல்லாமல் போனதுடன் படத்திற்கான வசூலில் லாபத்தையும் இழந்து தவித்துப் போனார் விஜய் சேதுபதி.

அனபெல் சேதுபதி: எவர்கிரீன் ஆன ஹாரர் காமெடி வகையை தேர்ந்தெடுத்து கட்டாயம் வெற்றி என்ற தலைகணத்துடன் களமிறங்கிய அனபல் சேதுபதியை, பேய் கூட எள்ளி நகையாடும் அளவிற்கு சொதப்பலான காமெடியை அரங்கேற்றி சிரிக்க வைக்க கட்டாயப்படுத்தினர். வெற்றியை எதிர்பார்த்த விஜய் சேதுபதி மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானார்.

Also read: கடைசியா விஜய் சேதுபதி நம்பி இருக்கும் படம்.. ஹீரோவா நடிச்சு ஹிட் கொடுத்து அஞ்சு வருஷம் ஆச்சு

ஜூங்கா: கெட்டப்ப மாத்தி நடிக்கிறேன் என்கிற பெயரில் ரசிகர்களை வச்சு செஞ்சிருந்தார் விஜய் சேதுபதி. இப்படி ஒரு கஞ்சத்தனமான டான் ஐ  தமிழ் சினிமாவில்  காட்டியதும் இல்லை இனிமேல் யாரும் காட்டப்போவதுமில்லை  என்றவாறு மாஸ் கதையில் கெத்தாக தோன்றி வசூலில் பின்னோக்கி சென்றிருந்தார் விஜய் சேதுபதி.

துக்ளக் தர்பார்: அரசியலை பின்னணியாக கொண்ட துக்ளக் தர்பாரில் சீரியஸான விஷயத்தை காமெடியாகவும் காமெடியாக சொல்லப்பட வேண்டியதை சீரியஸ் ஆகவும் கூறி  திரைக்கதையுடன் ரசிகர்களை ஒன்ற விடாமல் திண்டாடச் செய்தார் விஜய் சேதுபதி.

டிஎஸ்பி: காவல்துறை வேடத்தில் “சேதுபதி” படம் போன்று தெறிக்க விடப் போகிறார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஐயோ ஐயோ என்று நெஞ்சில்  அடிக்கும் அளவிற்கு கதற வைத்து விட்டார் டி எஸ் பி. படம் வெளியான அடுத்த நாளே வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஈடுபட்டனர் டிஎஸ்பி பட குழுவினர் ஏன் இந்த விபரீத முடிவு என அனைவரும் கேள்வி கேட்கும் வண்ணம் அவசர அவசரமாக வெற்றி விழா கொண்டாடியதன் காரணம் என்ன என்பது இயக்குனருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாகும்.

Also read: தெருக்கோடியிலிருந்து கோபுரத்திற்கு வந்த விஜய் சேதுபதியின் அசர வைக்கும் சொத்தின் மதிப்பு!

Trending News