வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

உனக்கு அரசியல் ஆசை வரவே கூடாதுன்னு தடுத்து நிறுத்தப்பட்ட விஜய்யின் 5 படங்கள்.. அப்ப G.O.A.T கசாப்பு கடைக்கு போவது உறுதியா?

5 films of Vijay which were banned and later released: நான் ரெடி தான் வரவா என ஒரு வழியாக அரசியல் வருகையை அறிவித்துவிட்டார் விஜய். சும்மா இருந்த சிங்கத்தை சுரண்டின மாதிரி, அவர் உண்டு வேலை உண்டுன்னு கம்முனு இருந்த மனுசன படத்தை வெளியிடாமல் தடுக்க போய், இப்போது எந்த அதிகாரத்தினால் தன் படங்களுக்கு முட்டுகட்டை போடப்பட்டதோ அதே அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கோடு களம் இறங்கி விட்டார் தளபதி.

மெர்சல்: அட்லி இயக்கத்தில் 2017 ஆண்டு வெளிவந்த விஜய்யின் மெர்சல் திரைப்படத்தில், அப்போதைய ஹாட் டாபிக்கான ஜிஎஸ்டி அறிமுகத்தையும் பண மதிப்பிழப்பு கொள்கையையும் வன்மையாக சாடி இருந்தனர் படக் குழுவினர். இதனால் படத்தை திரையிட கூடாது என மத்திய அரசை சேர்ந்த பிரதிநிதிகள் வழக்கு தொடுத்து தடை வாங்குவதாக மிரட்டினர்.  படத்தின் சர்ச்சைக்குரிய  காட்சிகளை நீக்கிய பின்பு தான் திரையிட அனுமதிக்கப்பட்டது மெர்சல்.

சர்க்கார்: அடுத்த ஆண்டு வெளிவந்த விஜய்யின் சர்க்கார் திரைப்படத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆளும் அரசை தாக்கியிருந்தார் தளபதி. குறிப்பாக இலவசங்கள்,  தேர்தல், கள்ள ஓட்டு என அரசியல் சூழ்ச்சிகளை அக்குஅக்காக பிரித்து இருந்தார் தளபதி. இதனாலேயே சர்க்கார் படத்திற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள்.

Also read: விஷால் எடுத்த விபரீத முடிவு! விஜய்யை வைத்து செஞ்ச பின்புதான் அரசியலா?

தலைவா: ஏ.எல் விஜய்யின் தலைவா திரைப்படத்தில் டேக் லைன்னிலேயே “டைம் டு லீட்” குறிப்பு கொடுத்து அரசியல் கட்சிகளை கடுப்பேற்றிதால், தலைவா படத்திற்கு ஏகப்பட்ட மிரட்டல்கள். “வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான்! எரித்தாலும் புதைத்தாலும் அழியாமலே வருங்காலம் பெயர் சொல்ல உரமாகுவான்” எனும் சுடும் வரிகளால் ஆளும் அரசை சுட்டுப் பொசுக்கினார் தளபதி.

கத்தி:  விவசாயம், தண்ணீர் பிரச்சினை என பல அரசியல் பேசி இருந்தார் தளபதி. லைக்காவின் கத்தி திரைப்படத்தை வெளியிட்டால் திரையரங்கை முற்றுகையிடுவோம் என தயாரிப்பு நிறுவனத்தை மிரட்டியது கட்சிகள். காவல் அலுவலகத்தில் கத்தி திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டார். பெரும் போராட்டத்திற்கு பின் கத்தி ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றி பெற்றது.

பிகில்: அட்லியின் பிகில் பட ஆடியோ லான்ச்சில் குட்டி கதையென ஆரம்பித்து யாரை எங்க உட்கார வைக்கணுமோ? அவங்கள தான் அங்க உட்கார வைக்கணும் என ஒரு வாக்கியத்தை தளபதி சொல்லி முடித்த அடுத்த வினாடியில் இருந்து பிரச்சனை செய்ய ஆரம்பித்து விட்டனர் கட்சிகள். இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் பறந்தது.  பல்வேறு தரப்புகளில் இருந்தும் தளபதிக்கு எதிர்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தன.  இருந்தாலும் படம் வெளிவந்து சிறப்பான வசூலை பெற்று தன்னை யாராலும் அசைக்க முடியாது என்று நிரூபித்தார் தளபதி. அப்ப G.O.A.T என்ன ஆகபோகுதோ?

Also read: அரசியல் ஆடுபுலி ஆட்டத்திற்கு அந்த நாலு எழுத்து சேனலை வாங்கும் விஜய்.. கேட்டாலே சும்மா அதிருதில்ல!

Trending News