வியாழக்கிழமை, நவம்பர் 14, 2024

அச்சி அசலா ஒரே மாதிரி வெளிவந்த 5 படங்கள்.. லோகேஷ் கனகராஜிக்கு வந்த இன்ஸ்பிரேஷன்

சமீபகாலமாகவே வன்முறை படங்கள் சூப்பர் ஹிட் அடிப்பதால் அப்படிப்பட்ட படங்களை எடுப்பதில் இளம் இயக்குனர்கள் கவனம் செலுத்துகின்றனர். அந்த வகையில் இதுவரை வெளியான 5 படங்களும் ஒரே கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்டு, அந்தப் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அப்படிப்பட்ட படங்களில் ஒரு படத்தை தன்னுடைய இன்ஸ்பிரேஷனாக கொண்ட லோகேஷ் கனகராஜ் அதன்பிறகு கைதி, விக்ரம் போன்ற படத்தை துணிந்து எடுத்திருக்கிறார்.

ஆரணிய காண்டம்: 2011 ஆம் ஆண்டு இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் முதல்படமான, இந்தப் படத்தில் கொலை மற்றும் வன்முறை ஆகியவற்றை பெருமளவில் வெளிக்காட்டப்பட்டிருக்கும். 6 பேரின் ஒருநாள் வாழ்க்கையை சொல்லும் வகையில் இந்தப்படத்தை உருவாக்கியிருப்பார்கள். இந்தப் படம் பெரும் சர்ச்சைகளுக்கு இடையில் படத்தின் பல காட்சிகளுக்கு தணிக்கையில் அனுமதி கிடைக்காததால் சுமார் 52 காட்சிகள் வெட்டப்பட்டு, அதன்பிறகே திரையிடப்பட்டது. இந்தப் படத்துக்கு சிறந்த படத்துக்கான தேசிய விருது கிடைத்ததுஎன்பது குறிப்பிடத்தக்கது.

கோலமாவு கோகிலா:  நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான இந்தப் படத்தில் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், ஜாக்லின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இந்தப்படத்தில் போதைப் பொருளை மையமாக வைத்து எடுத்திருப்பார்கள்.

மீகாமன்: 2014 ஆம் ஆண்டு மகிழ் திருமேனி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான இந்தப்படத்தில் போதைப் பொருள் கடத்தலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இதில் ஆர்யா காவல்துறையில் இருந்துகொண்டே போதைப்பொருள் கடத்தல் கும்பலை வேரறுப்பார். இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்து இருப்பார். இந்தப் படம்தான் லோகேஷ்க்கு கைதி, விக்ரம் படத்தை உருவாக்குவதற்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது.

கைதி: 2019 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதில் கைதியாக நடித்திருக்கும் கார்த்தி, காவல் அதிகாரி நரேன் வேண்டுகோளுக்கு இணங்க மிகப் பெரிய போதை கடத்தல் கும்பலுக்கு எதிராக பெரிய யுத்தத்தையே நடத்தி அந்த கும்பலின் சாம்ராஜியத்தை அடியோடு அளிப்பார்.

விக்ரம்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படம் கடந்த மாதம் ரிலீசாகி தற்போதுவரை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தப்படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் பலரது பாராட்டைப் பெற்றிருக்கிறது. கைதி, மீகாமன் படம் உருவான அதே கண்ணோட்டத்தில் தான் லோகேஷ் இந்த படத்தையும் எடுத்திருக்கிறார்.

இவ்வாறு லோகேஷ் கனகராஜ், ஆர்யா நடிப்பில் வெளியான மீகாமன் திரைப்படத்தை முன்மாதிரியாகக் கொண்டு அதே கண்ணோட்டத்தில் கைதி, விக்ரம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தற்போது முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -spot_img

Trending News