வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

புத்தாண்டை குறிவைத்து களமிறங்கும் 5 படங்கள்.. ஒருவழியாக படத்தை முடித்த லாரன்ஸ்

வரும் தமிழ் புத்தாண்டை ரணகளம் ஆகும் வகையில் போட்டி போட்டுக் கொண்டு ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகிறது. அதிலும் வெகு நாட்களாக ரசிகர்கள் காத்திருந்த ராகவா லாரன்ஸின் ருத்ரன் திரைப்படம் ஒரு வழியாக திரையரங்கில் ரிலீஸ் ஆகிறது.

ருத்ரன்: ராகவா லாரன்ஸ் கதாநாயகனாகவும், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகும் நடித்திருக்கும் படம் ருத்ரன். பைவ் ஸ்டார் கதிரவன் அறிமுகமாகும் ருத்ரன் படத்தை தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகிறது இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘பாடாத பாட்டெல்லாம்’ என்ற ரீமிக்ஸ் பாடல் வீடியோ சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்டானது. இதனால் இந்த படத்தில் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாகவே உள்ளது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. ரசிகர்களும் இந்த படத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருக்கும் நிலையில் ஒரு வழியாக படத்தை ரிலீஸ் செய்யப் போகின்றனர்.

பிச்சைக்காரன் 2:கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல், அவரே இந்த படத்தை இயக்கியும் தயாரித்து உள்ளார். மேலும் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது பலத்த காயமடைந்த விஜய் ஆண்டனி ஒரு வழியாக அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். மேலும் இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்கில் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

Also Read: பிச்சைக்காரன் 2 பட கதை இதுதான்.. தேறி வரும் விஜய் ஆண்டனிக்கு அடுத்தடுத்த சோதனை

பார்டர்: இயக்குனர் அறிவழகன் இயக்கி ஆல் இன் ஒன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள பார்டர் திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் அருண் விஜய், ரெஜினா கசாண்ட்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பலமுறை இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போன நிலையில் ஒரு வழியாக தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று இறுதியான முடிவை படக்குழு அறிவித்துள்ளது..

சகுந்தலம்: தெலுங்கு முன்னணி இயக்குனரான குணசேகரன் இயக்கத்தில், காளிதாசன் எழுதிய புராணத்தில் உள்ள சகுந்தலம் எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு புராணத் திரைப்படமாக உருவாக்கியுள்ளது. இந்த படத்தில் சமந்தா மற்றும் தேவ் மோகன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை தள்ளிப்போன நிலையில் கடைசியாக வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: விஜய் ஆண்டனி உடன் நேருக்கு நேராக மோதும் மாஸ்டர்.. ரேசில் திடீரென்று நுழைந்த 3வது ஹீரோ

துருவ நட்சத்திரம்: கௌதம் மேனன்-விக்ரம் கூட்டணியில் உருவான துருவ நட்சத்திரம் படத்தின் டீசர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதியிலே நின்றது மீண்டும் அதன் படப்பிடிப்பு 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு சமீபத்தில் தான் நிறைவடைந்துள்ளது. பை ஆபரேஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சியான் விக்ரமுடன் ரிது வர்மா, சிம்ரன், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் விக்ரம் ஜான் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தை வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர்.

இவ்வாறு இந்த ஐந்து படங்களும் வெகு நாட்களாக ரசிகர்கள் காத்திருந்த படங்களாகும். அதிலும் ராகவா லாரன்ஸின் ருத்ரன் மற்றும் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2, சமந்தாவின் சகுந்தலம், விக்ரமின் துருவ நட்சத்திரம் போன்ற படங்கள் இடையே கடும் போட்டி நிலவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் விஜய் ஆண்டனி.. மூளையை மாற்றி கம்பேக் கொடுத்த பிச்சைக்காரன் 2

Trending News