வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அடுத்த வருடம் ஆக்ஷன் படமாக களமிறங்க போகும் 5 படங்கள்.. கீரியும் பாம்புமாக நிற்கப்போகும் சிம்பு தனுஷ்

5 action films Release in next year:  ஒவ்வொரு பண்டிகையும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது போல் தற்போது முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களை ஆவலாக எதிர்பார்க்கும் படி நிலைமை ஆகிவிட்டது. அந்த வகையில் இந்த வருடத்தில் விஜய், அஜித், ரஜினி படங்களை பார்த்து ரசித்து விட்டோம்.  அத்துடன் நல்ல கதைகளுடன் வரக்கூடிய புதுப்புது படங்களையும் கொண்டாட ஆரம்பித்து விட்டோம்.

இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு சரித்திர படமாகவும் ஆக்ஷன் நிறைந்த அட்வெஞ்சர் படங்களும் வெளிவர இருக்கிறது. அது என்னென்ன படங்கள் என்பதை தற்போது பார்க்கலாம். வித்தியாசமான லுக்குடன் அதிக ரிஸ்க் எடுத்து சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதில் இவரை பார்ப்பதற்கே பயங்கரமாக இருப்பதால் இவருடைய அவதாரம் எப்படி இருக்கப் போகிறது என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறது. இப்படம் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வரப்போகிறது.

பீரியட் ஆக்சன் அட்வென்ச்சர் படமாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லரை பார்க்கும் பொழுது அதிகமான சண்டை மற்றும் ரத்தக்களரியான காட்சிகள் இடம்பெற்றது போல் இருக்கிறது. தற்போது வெளிவரும் படங்கள் அனைத்தும் வன்முறை படமாக இருப்பது டிரெண்டிங் ஆகிவிட்டது. அதனால் தனுசும் இந்த யுக்தியை பாலோ பண்ண ஆரம்பித்து விட்டார். இப்படம் பொங்கலுக்கு ரிலீசாக போகிறது.

Also read: ஒரே ஒரு படத்தில் ரஜினிக்கு தம்பியாக நடித்த விஜயகாந்த்.. நண்பனுக்காக சூப்பர் ஸ்டாருடன் நடிக்க மறுத்த கேப்டன்

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பழங்குடியினரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக உருவாகி இருக்கிறது. பொதுவாக விக்ரமுக்கு சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பது கைவந்த கலை. அந்த வகையில் இப்படத்திலும் தன்னுடைய கேரக்டருக்கு ஈடு கொடுக்க முடியாத அளவிற்கு கடின உழைப்பை போட்டு நடித்து இருக்கிறார். இப்படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி திரையரங்குகளுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு அவருடைய 48வது படத்திற்கு இணைந்திருக்கிறார். இப்படம் பீரியட் கால படமாக உருவாக போகிறது. இப்படத்தில் சிம்பு இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவலும் வெளிவந்திருக்கிறது. அந்த வகையில் தனுஷின் கேப்டன் மில்லருக்கு போட்டியாக சிம்பு அவருடைய படத்தை தரமாக கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

மணிரத்தினம் இயக்கத்தில் கமல் அவருடைய 234 வது படமான தக் லைஃப் படத்தில் கமிட் ஆயிருக்கிறார். இப்படத்தின் டீசர் வெளியானதில் கமலின் பேச்சும் செயலும் மிரட்டும் அளவிற்கு வெறித்தனமாக இருக்கிறது. இதில் த்ரிஷா மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து நடிக்கப் போகிறார்கள். இப்படி அடுத்த ஆண்டு ஆக்சன் நிறைந்த பீரியட் படமாக இந்த ஐந்து படங்களும் திரையரங்குகளுக்கு வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்த போகிறது.

Also read: விடாமல் துரத்தும் கோச்சடையான் 6 கோடி வழக்கு.. கோர்ட்டுக்கு வந்த லதா ரஜினிகாந்த், நீதிபதி போட்ட உத்தரவு

Trending News