வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கோடிக்கணக்கில் கடனில் தத்தளிக்கும் 5 படங்கள்.. ஆணியே புடுங்க வேண்டாம்னு கப்பிச்சிப்புன்னு இருக்கும் விக்ரம்

Five Films Not release: பொதுவாக ஒரு படம் திரையரங்குகளில் வருகிறது என்றால் அதற்கு பின்னணியில் ஏகப்பட்டோரின் உழைப்பு, விடாமுயற்சி, டெடிகேஷன் மற்றும் பல விஷயங்கள் அடங்கியதாக இருக்கும். பல கஷ்டங்களையும் தாண்டி தான் ஒரு படத்தை நல்லபடியாக எடுத்து முடிக்க முடியும். அந்த வகையில் வாரம் கிட்டத்தட்ட ஐந்து படங்கள் மேலாக ரிலீஸ் ஆகி கொண்டிருக்கிறது.

ஆனால் சில படங்கள் பூஜையுடன் ஆரம்பித்து படப்பிடிப்பும் தொடங்கிய நிலையில் பாதியுடனே நிறுத்தப்பட்டு இருக்கிறது.  இதனால் அப்படத்தின் தயாரிப்பாளர்கள் கோடி கணக்கில் நஷ்டப்பட்டு தத்தளித்துக் கொண்டு வருகிறார்கள். அது என்னென்ன படங்கள் என்று தற்போது பார்க்கலாம்.

Also read: மகனின் 14-வது பிறந்த நாளை கொண்டாடிய விஷால்.. வெளியான புகைப்படத்தால் வந்த அதிர்ச்சி

அதாவது விஷால் ஆரம்பத்தில் நல்ல படங்களை கொடுத்து மக்களிடம் வரவேற்பு கிடைத்தாலும் போக போக இவரை யாரும் கண்டு கொள்ளாத படி தான் இவருடைய படங்கள் வந்து போய்க்கொண்டிருக்கிறது. அதனால் எப்படியாவது ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்று சுந்தர் சி கூட்டணி உடன் இணைந்தார். அந்த வகையில் மத கஜ ராஜா என்ற படம் 2012 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு பலமுறை தாமதமாகி கொண்டு இன்னும் வெளியே வராமல் இருக்கிறது.

அடுத்ததாக நடிகர் விக்ரம், கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து உடலையும் தோற்றத்தையும் வருத்திக் கொண்டு நடிப்பதில் இவரை மிஞ்சும் அளவிற்கு யாரும் கிடையாது. அப்படிப்பட்ட இவருடைய துருவ நட்சத்திரம் படமானது கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ளது. ஆனால் இப்படம் இன்னும் வெளியே வராமல் பண பிரச்சினை காரணமாக கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதில் விக்ரமும் எனக்கென என்று கப்பிச்சிப்பினு அமைதியாக இருக்கிறார்.

Also read: முரட்டு மொட்டை லுக்கில் கதிகலங்க வைத்த விக்ரம்.. லோகேஷால் எடுக்கும் புது அவதாரம்

மேலும் காமெடி நடிகராக சினிமாவிற்கு நுழைந்து ஹீரோவாக வந்து கொண்டிருக்கும் சந்தானத்தின் சர்வ சுந்தரம் படம் பல வருடங்களாக இழுவையில் இருக்கிறது. ஆனால் இதில் இவரை பார்ப்பதற்கு நாகேஷ் போல் இருந்ததால் இப்படத்தை பார்ப்பதற்கு பலரும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்ததாக சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாக்கப்பட்ட இடம் பொருள் ஏவல் திரைப்படம் 10 வருடங்களாகவே ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.

அடுத்ததாக செகண்ட் இன்னிங்ஸில் தனக்கு கிடைத்த வரவேற்பின் மூலம் தொடர்ந்து படங்கள் நடித்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று போராடிவரும் அரவிந்த்சாமி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள நரகாசுரன் படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். இப்படம் 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் நிதி நெருக்கடியால் படம் வெளியாகாமல் அப்படியே இருந்து வருகிறது.

Also read: விக்ரம் படத்தை மனதில் வைத்து விஜய் சேதுபதி கொடுக்கும் டார்ச்சர்.. உச்சகட்ட தலைவலியில் லோகேஷ்

Trending News