புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வார இறுதியில் பாக்ஸ் ஆபீசை தெரிக்கவிட்ட 5 படங்கள்.. 4-வது வாரமும் கல்லாவை நிரப்பிய கமல்!

தியேட்டர்களில் சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் ரசிகர்களின் மனதை கவர்ந்த படங்கள் மட்டுமே அடுத்தடுத்த வாரங்களில் திரையிடப்படும். அப்படி தற்போது திரையரங்கில் அடித்து நொறுக்கும் 5 படங்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று கொண்டிருக்கிறது.

விக்ரம்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸானது. ரிலீஸான முதல் நாளிலிருந்து தற்போது வரை எந்தவித நெகட்டிவ் கமெண்ட்களையும் பெறாமல் தொடர்ந்து நான்காவது வாரத்திலும் திரையரங்கில் ரசிகர்களை அலைமோத செய்திருக்கிறது.

இதுவரை தமிழகத்தில் மட்டும் 165 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்து இருக்கும் விக்ரம், சர்வதேச அளவில் 400 கோடியை தாண்டி வசூல் வேட்டையாடுகிறது. இதுவரை வெளியான தென்னிந்திய படங்களை காட்டிலும் விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு அடையாளமாகவே மாறி புதிய சாதனை படைத்துள்ளது. விக்ரம் திரைப்படம் தான் சமீபத்தில் வெளியான படங்களில் பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூலை ஈட்டிய படங்களின் லிஸ்டில் டாப் இடத்தை பிடித்திருக்கிறது.

ஜக் ஜக் ஜியோ: பாலிவுட் பிரபலங்களான வருண் தவான், கியாரா அத்வானி, அனில் கபூர் மற்றும் நீது கபூர் நடித்துள்ள ஜக் ஜக் ஜியோ திரைப்படம், குடும்ப கதையம்சம் கொண்ட திரைப்படமாக இருப்பதால் இந்த படத்தின் இயக்குனர் கரண் ஜோஹர் ரசிகர்களை குடும்பத்துடன் திரையரங்கில் குவியச் செய்யும் அளவிற்கு பட்டத்தை அட்டகாசமாக இயக்கியிருக்கிறார்.

படத்தில் காமெடி, சோகக் காட்சிக்கு பஞ்சமில்லாமல் விரு வெறுப்பிற்கும் குறைவில்லாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த படம் இருக்கிறது. 85 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் ஜூன் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகி, முதல் இரண்டு நாளில் 22 கோடியையும், மூன்றாவது நாளில் 15 கோடியையும் ஈட்டி திரையரங்கில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

வீட்ல விசேஷம்: ஆர் ஜே பாலாஜி இயக்கி நடித்திருக்கும் இந்த படத்தில் அவருடன் ஊர்வசி, சத்யராஜ், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பேரப்பிள்ளை எடுக்கிற வயசில் குழந்தை பெற்றுக்கொண்டால் அதெல்லாம் சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ள முடியாதது என்ற கருத்துக்கு எதிராக எடுத்திருக்கும் இந்த படம் திரையரங்கில் கடந்த ஜூன் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆகி வசூல் வேட்டையாடுகிறது. இதுவரை இந்த படம் 10 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸின் ஹிட் லிஸ்டில் அமைந்துள்ளது.

மாமனிதன்: சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி காயத்ரி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் முதன்முதலாக இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இசை அமைக்கின்றனர். தன்னுடைய குழந்தையின் கல்விக்காக பாடுபடும் ஒரு சராசரி தந்தையின் போராட்டமான வாழ்க்கை நிகழ்வுகளையும் அதில் அவர் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் இந்தப் படத்தின் மூலம் சீனுராமசாமி தத்ரூபமாக கண்டித்திருக்கிறார். ஜூன் 24ஆம் தேதி திரைக்கு வந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று 3 நாட்களில் 3 கோடி வசூலை பெற்றிருக்கிறது.

ஜுராசிக் வேர்ல்ட்: ஹாலிவுட் படமான இந்த படத்தை காலின் ட்ரெவர்ரோ இயக்கி ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் ஜூன் 10 ஆம் தேதி ரிலீஸானது. இந்தப்படத்தில் க்ரிஸ் ப்ராட், ப்ரைஸ் டல்லாஸ் ஹோவர்ட், லாரா டெர்ன், ஜெஃப் கோல்ட்ப்லம், சாம் நீல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். 15 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 167 கோடி பாக்ஸ் ஆபீசை பெற்ற ரசிகர்களிடம் தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இவ்வாறு தற்போது வெளியாகி இருக்கும் படங்களின் லிஸ்டில் உலகநாயகன் கமலஹாசன் நடித்திருக்கும் விக்ரம் படம் தான் நான்கு வாரங்களாக பாக்ஸ் ஆபீஸில் மற்ற எந்த படங்களையும் உள்ளே விடாமல் தனி ஒரு ஆளாக நின்று கமலஹாசன் சர்வதேச அளவில் கல்லாக் கட்டிக் கொண்டிருக்கிறார். கூடிய விரைவில் விக்ரம் 500 கோடியைத் தொட்டுவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News