2வருடங்களாக ஹிட் இல்லாமல் காய்ந்து கிடக்கும் லைகா.. கடைசியாக வாங்கிய ஐந்து மரண அடிகள்

பெரிய பட்ஜெட் படங்களை எல்லாம் அசால்டாக தயாரித்து வரும் லைகா நிறுவனம் தற்போது நிதி நெருக்கடியில் இருந்து வருகிறது. வேட்டையன், விடாமுயற்சி போன்ற படங்களை நம்பி இருக்கிறது. இந்த படங்கள் ஓட விட்டால் லைகா மீண்டு வருவது கடினம். கடைசியாக லைகா நிறுவனத்தை நஷ்டப்படுத்திய 5 படங்கள்

தீராக்காதல்: 2023ஆம் ஆண்டு ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவந்த இந்த படம் 10 கோடியில் உருவாக்கப்பட்டது. ஆனால் போஸ்டர் ஒட்டிய காசு கூட வசூலிக்கவில்லை. இதுதான் லைக்கா தயாரித்ததில் கம்மியான பட்ஜெட்டில் உருவான படம்.

சந்திரமுகி 2: பி வாசு இயக்கிய இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. முதல் பாகத்தில் ரஜினிகாந்த் நடித்தார். இரண்டாம் பாகம் வேண்டாம் என சூப்பர் ஸ்டார் மறுத்ததால், ராகவா லாரன்ஸ், கங்கன ரணவத் போன்றவர்கள் நடித்தார்கள்.35 கோடிகளில் எடுக்கப்பட்ட இந்த படம் 10 கோடிகள் கூட வசூலிக்கவில்லை

மிஷன் சாப்டர் ஒன்: என்னை அறிந்தால் படத்திற்கு பின் அருண் விஜய் மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார். 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 23 கோடிகள் மட்டுமே வசூலித்தது. அருண் விஜய் பெரிதும் நம்பி இறந்து ஏமாற்றம் அடைந்த படம் இது.

லால் சலாம் மற்றும் இந்தியன் 2: ரஜினி கமல் என மாறி மாறி இருவரும் மோசம் செய்து விட்டனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய இந்த படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோல் பண்ணினார். அதேபோல் இந்தியன் 2 படமும் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. இரண்டு பெரிய ஹீரோக்களாலும் நஷ்டம் அடைந்தது லைகா நிறுவனம்.

- Advertisement -spot_img

Trending News