புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விஜய் ஆண்டனியை ஹீரோவாக தூக்கி விட்ட 5 படங்கள்.. 20 வருஷத்துல சேர்த்து வைத்த மொத்த சொத்து மதிப்பு

Vijay Antony: சினிமா பிரபலங்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே மாதிரி இன்னொரு பக்கம் அந்த பிரபலங்களை வெறுக்கும் அளவிற்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால் ஒரு சில ஹீரோக்கள் மட்டும் ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதிக்காமல் நல்ல பேரை பெற்று வருகிறார்கள். இந்த லிஸ்டில் விஜய் ஆண்டனியும் இடம்பெற்றிருக்கிறார். இவரைப் பற்றி இதுவரை எந்தவித நெகட்டிவ் விமர்சனங்களும் வந்ததில்லை.

ரசிகர்களும் விஜய் ஆண்டனியை வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு எந்த வித சர்ச்சையையும் ஏற்படுத்தவில்லை. அந்த அளவிற்கு விஜய் ஆண்டனி ஒரு எதார்த்தமான நடிகராகவும், மக்களுக்கு பிடித்தமான கேரக்டரிலும் இருக்கிறார். ஆரம்பத்தில் இசையமைப்பாளராக சினிமாவிற்குள் நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக கதாநாயகனாக அவதாரம் எடுத்து பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.

கோடியில் புரளும் விஜய் ஆண்டனி

அப்படி இவர் நடிப்பில் வெளிவந்த படங்களில் இவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் எதுவென்றால் பிச்சைக்காரன், சலீம், சைத்தான், கொலைகாரன், கோடியில் ஒருவன். அதே மாதிரி இவர் இசையமைத்த குத்து பாடல்கள் ரசிகர்கள் எப்போதுமே கும்மாளம் போடும் அளவிற்கு மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

இப்படிப்பட்ட இவரை சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமை விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர். இவர் தான் சுக்கிரன் படத்தின் மூலம் விஜய் ஆண்டனிக்கு இசையமைப்பாளராக வாய்ப்பு கொடுத்தார். இதன் மூலம் தொடர்ந்து டிஷ்யூம், நான் அவனில்லை, நினைத்தாலே இனிக்கும், போன்ற பல படங்களில் இசையமைப்பாளராக பணிபுரிந்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார்.

குறிப்பாக காதலில் விழுந்தேன் படத்தில் “உன் தலைமுடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே” பாடல்களை மெலோடியாக கொடுத்து உச்சம் தொட வைத்தது. அடுத்ததாக அட்ரா அட்ரா நாக்க முக்க பாடல் கேட்பவர்களை இறங்கி குத்தாட்டம் போட வைக்கும் அளவிற்கு குத்துப் பாடலில் கலக்கி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தற்போது நடிப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு வெளிவந்த ரோமியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இவருடைய நடிப்புக்கு வழக்கம்போல் பாராட்டுக்கள் குவிந்தது. இந்நிலையில் இன்று இவருடைய 49 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். ஆனால் இடையில் இவருடைய மகள் மீரா தற்கொலை செய்து பெரிய துக்கத்தை ஏற்படுத்தியதால் பெரிய அளவில் கொண்டாடாமல் இருக்கிறார்.

ஆனால் இதை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து அடுத்தடுத்த வேலைகளை பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இப்படி இவர் சினிமாவிற்குள் நுழைந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆன நிலையில் தற்போது வரை இவர் சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு என்ன என்பதை பார்க்கலாம். சென்னை மற்றும் பெங்களூரில் இவருக்கு சொந்தமான கோடிக்கணக்கில் பங்களா இருக்கிறது.

மேலும் இவர் அதிகமாக ஆசைப்படுவது சொகுசான கார்களை பயன்படுத்த வேண்டும் என்பதுதான். அந்த வகையில் பிஎம்டபிள்யூ கார், இதைத்தவிர நான்கு உயர்தர சொகுசு கார்களை வைத்திருக்கிறார். அத்துடன் இவருடைய மனைவி பர்கானா தயாரிப்பாளராகவும் வளர்ந்து கொண்டிருக்கிறார். விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவரும் படங்களை முக்கால்வாசி அவர்தான் தயாரிக்கிறார். இப்படி இருவரும் சேர்ந்து சேர்த்து வைத்திருக்கும் மொத்த சொத்து மதிப்பு 70 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஆண்டனிக்கு சோதனையை கொடுத்த சம்பவங்கள்

Trending News