திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ட்ரெய்லர் ஓட மாயமாக மறைந்து போன 5 படங்கள்.. சந்தானத்திற்கு கை கொடுக்காத சர்வர் சுந்தரம்

Not Release Some Movies: சினிமாவை பொருத்தவரை ஒரு படத்தை முழுமையாக எடுத்து முடிப்பது சாதாரண விஷயம் அல்ல. ஆனாலும் அவர்கள் அந்த படத்தை வெற்றிகரமாக வெளியிட்டு அதில் லாபத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக முழு முயற்சியுடன் போராடி வருவார்கள். அப்படி எடுக்கப்பட்ட சில படங்கள் வெளியிட முடியாமல் ஏதோ ஒரு காரணங்களால் ட்ரெய்லர் வெளியிட்டதோடு நின்று போய் இருக்கிறது.

அந்த ட்ரெய்லரை பார்க்கும் பொழுது, இது நல்ல கதையாக இருக்கிறது. அதுவும் இவர்கள் ஹீரோவாக நடித்திருக்கிறார்களா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு ட்ரெய்லர் இருக்கிறது. அப்படி மிகுந்து எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருந்த சில படங்கள் காணாமலே போய்விட்டது. அப்படிப்பட்ட படங்களை பற்றி பார்க்கலாம்.

Also read: சப்போர்ட் கேரக்டரில் நடித்து கேரியரை தொலைத்த 7 நடிகர்கள்.. திறமை இருந்தும் வாய்ப்பில்லாமல் தவிக்கும் கலையரசன்

அதில் “டைட்டானிக் காதலும் கவுந்து போகும்” என்ற திரைப்படத்தை இயக்குனர் ஜானகிராமன் எடுத்திருக்கிறார். இப்படத்தில் கலையரசன், ஆனந்தி, காளி வெங்கட் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவையாகவும், அத்துடன் ஹீரோவாக கலையரசன் மற்றும் காளி வெங்கட் நடிப்பு மிகவும் பிரமாதமாக இருக்கும். அப்படிப்பட்ட படம் இன்னும் வெளியில் வரவில்லை.

அடுத்ததாக விஷ்ணு விஷால் நடிப்பில் “இடம் பொருள் ஏவல்” என்ற படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்கி வந்தார். இப்படம் 35 நாட்கள் சூட்டிங் முடிந்த நிலையில் அடுத்து எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. இதனை அடுத்து நாகேஷின் கதாபாத்திரத்தை வைத்து சந்தானம் “சர்வ சுந்தரம்” என்ற படத்தில் நடித்து வந்தார்.

Also read: சூரியை பார்த்து மீண்டும் பழைய ட்ராக்கிற்கே வந்த சந்தானம்.. கைவசம் இத்தனை படங்களா?

இதனுடைய ட்ரெய்லர் வந்து ஆறு வருடங்கள் ஆகியும் இன்னும் படம் வெளிவராமல் தவித்துக் கொண்டிருக்கிறது. மேலும் “அலாவுதீனின் அற்புத கேமரா” என்ற படத்தில் மூடர் கூடம் நவீன் மற்றும் ஆனந்தி நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் ட்ரெய்லர் வெளிவந்து 4 வருடங்கள் ஆகிய நிலையில் படம் இன்னும் வெளிவராமல் அனைவரையும் காக்க வைத்து இருக்கிறது.

அடுத்ததாக அரவிந்த்சாமி நடிப்பில் “நரகாசுரன்” என்ற படம் என்ன ஆச்சு என்று தெரியாமலே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இவருக்கு நேரமே சரியில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இந்த ஒரு படம் மட்டும் இல்லாமல் இதனுடன் சேர்ந்து நான்கு படங்கள் முடிந்த நிலையில் இன்னும் ஒன்று கூட ரிலீஸ் ஆகவில்லை. இப்படி இந்த ஐந்து படங்களும் ட்ரைலர் மட்டுமே வந்த நிலையில் படம் மாயமாக மறைந்து விட்டது.

Also read: திருமணத்தால் மார்க்கெட் இழந்த 5 நடிகர்கள்.. அழகு இருந்தும் பிரயோஜனம் இல்லாமல் போன அரவிந்த்சாமி

Trending News