சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

2023ல் வெளியாகி ஒரே வாரத்தில் அதிக வசூல் செய்த 5 படங்கள்.. 100 கோடி கலெக்ஷன் சிவகார்த்திகேயனுக்கு டஃப் கொடுத்த ஹீரோ

இந்த வருடம் ஆரம்பித்து ஐந்து மாதங்களிலேயே எத்தனையோ திரைப்படங்கள் திரையரங்கில் வந்திருந்தாலும் சில படங்கள் மட்டும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அப்படி வெளிவந்த ஐந்து படங்களின் முதல் வாரத்தில் பெற்ற வசூலை பற்றி பார்க்கலாம்.

பொன்னியின் செல்வன் 2: கடந்த மாதம் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் இந்த வருடம் வெளியான படங்களிலே இப்படம் தான் வசூல் ரீதியாக வெற்றி பெற்று வருகிறது. அதிலும் இப்படம் வெளியான முதல் வாரத்திலேயே 261.50 கோடி வசூலை பெற்றிருக்கிறது.

Also read: விஜய் சேதுபதிக்கு காலை வாரிவிட்ட 5 படங்கள்.. 2 மணி நேரமா மண்டையை சொரிய வைத்த மக்கள் செல்வன்

வாரிசு: இந்த வருடம் பொங்கல் தினத்தை ஒட்டி வெளிவந்த வாரிசு திரைப்படம் குடும்பத் திரைப்படம் ஆக ரசிகர்களை கவரும்படி வெளிவந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு பெற முடியாமல் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தாலும் விஜய் படம் என்பதால் அவருக்கு வசூல் அளவில் எந்தவித சரிவும் ஏற்படாமல் வெளிவந்த முதல் வாரத்திலேயே 250 கோடி வசூலை பெற்று லாபத்தை கொடுத்திருக்கிறது.

துணிவு: இந்த வருடம் பொங்கல் தினத்தன்று வெளிவந்த துணிவு திரைப்படம் இவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்தது. அந்த அளவுக்கு அஜித்திற்கு மிகப்பெரிய மாசாக அமைந்து வெற்றிவாகை சூடியது. இப்படம் வெளிவந்த முதல் வாரத்திலேயே 150 கோடி வசூலை பெற்றது.

Also read: சினிமாவை கைவிடும் தளபதி விஜய்.. துணிச்சலான முடிவால், அதிரும் திரையுலகம்

விடுதலை: கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளிவந்த விடுதலை திரைப்படம் கதையே மையமாக வைத்து சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் சக்கை போடும் அளவிற்கு ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. இப்படம் வெளிவந்த முதல் வாரத்திலேயே 25 கோடிக்கும் மேல் வசூலை பெற்று சிவகார்த்திகேயனுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு சூரி வளர்ந்து வருகிறார்.

டாடா: தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் கவின் கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டார் என்றே சொல்லலாம். தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் லாபத்தை கொடுத்து தான் வருகிறது. அதிலும் இவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த டாடா படம் நல்ல வரவேற்பை பெற்றது. வெளிவந்த முதல் வாரத்திலேயே 11.5 கோடி வசூலை பெற்றிருக்கிறது.

Also read: கவின் வெற்றிபெற்ற இயக்குனரை லாக் செய்த துருவ்.. விக்ரம் போடும் வசூல் கணக்கு பலிக்குமா

Trending News