5 Films Not Satisfied: தற்போது வெளிவரும் படங்கள் நீயா நானா என்று போட்டி போட்டு வசூல் அளவில் ஜெயிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே இருக்கிறது. அதற்காகத்தான் பல முன்னணி நடிகர்களும் மோதிக் கொள்கிறார்கள். அந்த வகையில் அவர்கள் நடிக்கும் படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா என்று கேட்டால் அது கேள்விக்குறியாக தான் இருக்கிறது.
ஏனென்றால் ஒவ்வொரு படங்களும் வசூலில் லாபத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் எடுக்கப்படுகிறது. இதைத்தவிர நல்ல கதையாகவும் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கக்கூடிய படமாகவும் இல்லாமல் போய்விட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு வெளிவந்த படங்களில் ரசிகர்களை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத படங்களின் லிஸ்ட் வெளியாயிருக்கிறது. அது என்னென்ன படங்கள் யார் நடித்த படங்கள் என்பதை பார்க்கலாம்.
மணிரத்தினம் படம் என்றாலே அதற்கு ஒரு உயிரோட்டமான கதை இருக்கும் என்று மக்கள் அவருடைய படங்களை விரும்பி பார்ப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 படத்தில் சில விஷயங்கள் மிஸ் ஆயிருக்கிறது என்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போய்விட்டது.
Also read: பான் இந்தியா படத்துக்காக மணிரத்தினம் செய்யத் துணிந்த விஷயம்.. சேர்ந்தே ஒத்து ஊதிய கமல்
அடுத்ததாக எப்போதுமே ரியலுக்கு மட்டும் தான் மதிப்பு அதிகம் என்பதற்கு ஏற்ப சந்திரமுகி 2 படத்தில் லாரன்ஸ் நடித்த போது அதை உணர்த்தி விட்டார். அதாவது சந்திரமுகி படத்தில் ரஜினி நடித்த வேட்டையன் கேரக்டர் எப்போதுமே மக்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்தது. அதேபோல சந்திரமுகி 2 படத்திலும் ஒரு பிரம்மாண்டம் இருக்கும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமாக லாரன்ஸின் நடிப்பு வேடிக்கையாக போய்விட்டது.
இதனை அடுத்து பாகுபலி பிரபாஸுக்கு இந்த ஆண்டு வெளிவந்த ஆதிபுருஷ் படம் ஒரு கார்ட்டூன் படம் மாதிரி கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிவிட்டார். பாகுபலி படம் மாதிரி இருக்கும் என்று எதிர்பார்த்தால் சின்ன குழந்தைகள் பார்க்கும் படி கார்ட்டூன் படமாக அமைந்துவிட்டது. இதே மாதிரி கார்த்தியின் 25வது படமாக வெளிவந்த ஜப்பான் படமும் படும் மோசமான விமர்சனத்தை பெற்று கழுவி கழுவி ஊத்தும் அளவிற்கு மொக்கையாக போய்விட்டது.
அடுத்ததாக எப்போதுமே ஆட்டநாயகன், வசூல் மன்னன் என்று ரசிகர்களால் முத்திரை குத்தப்பட்ட விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. விஜய்யின் நடிப்பில், லோகேஷ் இயக்கத்தில் படம் வெளி வருகிறது என்றால் எந்த அளவிற்கு மக்கள் எதிர்பார்ப்பை வைத்து இருந்தார்களோ, அவர்களை எல்லாம் ஏமாற்றும் விதமாக படம் பல சொதப்பல்களை தழுவி ரசிகர்களை பெரிய அளவில் ஏமாற்றி விட்டது.
Also read: அஜித், விஜய் படத்தை ரிஜெக்ட் செய்த சாய் பல்லவி கூறிய காரணம்.. கேப்பில் ஸ்கோர் செய்த த்ரிஷா