
Vadivelu : கோடை விடுமுறை என்றாலே ரசிகர்கள் எந்த நடிகரின் படம் வெளியாகும் என்று காத்துக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் விருந்தாக ஐந்து படங்கள் வெளியாக இருக்கிறது.
தொடக்கமே அஜித்தின் குட் பேட் அக்லி படம் தான். வருகின்ற ஏப்ரல் பத்தாம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் இப்போது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர்.
அடுத்ததாக ஏப்ரல் 18ஆம் தேதி விஜய்யின் சச்சின் படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளது. சமீபகாலமாக ரீ ரிலீஸ் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்போது கூட எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படம் வெளியானது.
கோடை விடுமுறையில் வெளியாக உள்ள 5 படங்கள்
ஏப்ரல் 24ஆம் தேதி சுந்தர் சி மற்றும் வடிவேலு காம்போவில் உருவான கேங்கர்ஸ் படம் வெளியாகிறது. இந்த மாஸ் கூட்டணியில் தலைநகரம் படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. ஆகையால் மீண்டும் இவர்கள் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு சற்று கூடுதலாக தான் இருக்கிறது.
கார்த்திக் சுப்புராஜ், சூர்யா கூட்டணியில் உருவாகி இருக்கிறது ரெட்ரோ. இந்தப் படத்தின் பாடல் அண்மையில் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில் மே ஒன்றாம் தேதி ரெட்ரோ படம் திரைக்கு வர இருக்கிறது.
மே மாதம் முதல் வாரத்தில் வெளியாக உள்ளது டிடி நெக்ஸ்ட் லெவல். சந்தானம் நடிப்பில் உருவான இந்தப் படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பை அடுத்த நிலையில் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் இயக்குனர் கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.