உதயநிதியுடன் மோதிப் பார்க்கும் வாத்தி, இந்த வாரம் 5 படங்கள் ரிலீஸ்.. மீண்டும் ஓடிடி-யில் மார்க்கெட்டை ஏத்தும் தனுஷ்!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் புதிய படங்கள் வெளியாகுவது என்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் ஒரே நாளை குறி வைத்து எக்கச்சக்க படங்கள் வெளியாக உள்ளது. அதிலும் தியேட்டரில் வெளியாகி வசூல் ரீதியாக பட்டய கிளப்பிய தனுஷின் வாத்தி மீண்டும் ஓடிடி யில் வெளியாகி உதயநிதியுடன் மோத உள்ளது. மேலும் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாக உள்ள 5 படங்களை இங்கு காணலாம்.

கண்ணை நம்பாதே: இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கண்ணை நம்பாதே. இதில் உதயநிதிக்கு ஜோடியாக ஆத்மிகா இணைந்து நடித்துள்ளார். திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். மேலும் இப்படம் வருகிற மார்ச் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Also Read: எல்லா கொலைகளுக்கு பின் அழுத்தமான காரணம் இருக்கும்.. மிரட்டும் உதயநிதியின் கண்ணை நம்பாதே ட்ரெய்லர்

கோஸ்டி: இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள நகைச்சுவை கலந்த திரில்லர் திரைப்படம் ஆகும். இதில் கே எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற மார்ச் 17ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது.

கப்சா: கன்னட திரை உலகில் காந்தாரா திரைப்படத்தை தொடர்ந்து  மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கப்சா. இதில் கிச்சா சுதீப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள கப்சா நேரடியாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

Also Read: அஜித்தோட அந்த படத்தை போட்டு காமிச்சிராதீங்க.. காஜலை வைத்து சர்ச்சையை கிளப்பிய ப்ளூ சட்டை மாறன்

வாத்தி: இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாத்தி. இதில் தனுஷிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் இணைந்து நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்த நிலையில்  தற்பொழுது நெட்பிளிக்ஸ் ஓடிடி  தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது

சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்: மிர்ச்சி சிவா மற்றும் நடிகை மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும். நகைச்சுவை திரைப்படம் ஆக உருவாகி உள்ள இப்படத்தை இயக்குனர் விக்னேஷ் இயக்கியுள்ளார். இதில் அஞ்சு குரியன், பகவதி பெருமாள், மொட்ட ராஜேந்திரன், மாகாபா ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Also Read: குடும்பத்தோடு அவமானப்பட்ட தனுஷ்.. ராஜதந்திரத்துடன் பழிக்கு பழி வாங்கிய அசுரன்