வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வில்லன் இல்லாமல் விஜய் ஹிட் கொடுத்த 5 படங்கள்.. சந்தர்ப்ப சூழ்நிலையையும் சாதகமாகிய தளபதி

Vijay 5 Films Without Villains: இப்போது காலகட்டத்தில் பாலிவுட்டில் இருக்கும் பிரபல நடிகர்கள் தமிழ் படங்களில் வில்லனாக மிரட்டி வருகிறார்கள். ஆனால் ஒரு காலகட்டத்தில் தன்னுடைய படங்களில் வில்லனே இல்லாமல் விஜய் ஹிட் கொடுத்துள்ளார். அந்த படங்களில் சூழ்நிலை காரணமாக பிரச்சனை வந்தாலும் அதையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி வெற்றி கொடுத்த 5 படங்களை பார்க்கலாம்.

குஷி : எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் விஜய் மற்றும் ஜோதிகா இருவரும் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் குஷி. இந்த படத்தில் வில்லன் இல்லை என்றாலும் விஜய் மற்றும் ஜோதிகா இடையே இருக்கும் ஈகோ தான் பிரச்சனையாக இருந்தது. கடைசியில் அதையும் விட்டுக் கொடுத்து இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள்.

Also Read : விஜய்யின் கொஞ்ச நஞ்ச மானத்தை மொத்தமாக வாங்கிய எஸ்ஏசி.. வாரிசு வசூல் உண்மையா?

பிரண்ட்ஸ் : விஜய் மற்றும் சூர்யா உயிருக்கு உயிரான நண்பர்களாக நடித்த படம் பிரண்ட்ஸ். இந்த படத்தில் கதாநாயகி தேவயானியை தவறாக புரிந்து கொண்ட சூர்யா விஜய் இடம் வாதாடுவார். இதனால் இவர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டாலும் கடைசியில் நண்பர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள்.

காதலுக்கு மரியாதை : விஜய் மற்றும் ஷாலினியின் அற்புதமான காதல் கதையில் வெளியான படம் தான் காதலுக்கு மரியாதை. இந்த படத்தில் குடும்பத்திற்காக தங்களது காதலையே தியாகம் செய்ய விஜய் மற்றும் ஷாலினி முற்படுவார்கள். ஆனால் இரு குடும்பமும் சேர்ந்து கடைசியில் இவர்களது காதலுக்கு பச்சைக்கொடி காட்டுவார்கள்.

Also Read : ஒருவேளை சோறு கூட போடாத ரஜினி.. அவர் கூட விஜய்யை கம்பேர் பண்ணாதீங்க, சர்ச்சையை கிளப்பிய பிரபலம்

துள்ளாத மனமும் துள்ளும் : விஜய்யின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் காதலுக்கு மரியாதை. இந்த படத்தில் ஆரம்பத்தில் விஜய்யை தவறாக புரிந்து கொள்ளும் சிம்ரன் கண்பார்வை இழந்த பிறகு குட்டியை காதலிப்பார். ஆனால் கண் பார்வை பெற்ற பிறகு விஜய் வெறுக்கும் சிம்ரன் கடைசியில் குட்டி தான் இவர் என்பதை தெரிந்தவுடன் தளபதியை ஏற்றுக்கொள்வார்.

பூவே உனக்காக : விஜய் மற்றும் சங்கீதா இயக்கத்தில் விக்ரமன் நடிப்பில் வெளியான திரைப்படம் பூவே உனக்காக. இந்த படத்தில் தனது காதலியின் விருப்பத்திற்காக இரண்டு குடும்பங்களை இணைக்கும் போராட்டத்தில் விஜய் ஈடுபடுவார். இப்படம் சென்டிமென்ட் கலந்த நகைச்சுவை படமாக வெளியாகி வெற்றி பெற்றது.

Also Read : விஜய், அஜித் படங்களுக்கு இல்லாத ஓப்பனிங்.. இத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்ட மாமன்னன்!

Trending News