2025 பொங்கலுக்கு இப்பவே துண்டை போட்ட 5 படங்கள்.. நொந்து நூடுல்ஷாகி ஏமாந்த அஜித்

2025 பொங்கலுக்கு பல படங்கள் கூப்பாடு போட்டாலும் இப்போதைக்கு சூட்டிங் முடிந்து ரேசில் 5 படங்கள் இடம்பெற்றுள்ளது. கிட்டத்தட்ட பத்து படங்கள் பொங்கலுக்கு வெளிவருவதாக இருந்தது. ஆனால் அவை அனைத்தும் பாதியில் நின்று தத்தளிக்கிறது. இப்போதைக்கு ஜனவரி ஜனவரி மாதம் துண்டை போட்ட படங்கள்.

விடாமுயற்சி: பல போராட்டங்களுக்கு பின்பு நொந்து நூடுல்ஸ்ஷாகி ரெடியாகிவிட்டது விடாமுயற்சி. கிட்டத்தட்ட ஒரு வருட காலம் இந்த படத்தை எடுத்து வருகிறார்கள். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. தீபாவளிக்கு ரிலீஸ் செய்தாக வேண்டும் என விடாப்பிடியாய் லைகா இருந்தும் பிரயோஜனம் இல்லை.

வீரதீர சூரன்: தங்களானுக்குப் பிறகு விக்ரம் இந்த படத்தை பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறார். சேதுபதி, சித்தா போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அருண்குமார் இந்த படத்தை செதுக்கி வருகிறார். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி பெட்டிக்கடை விக்ரமின் காளி கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.

கேம் சேஞ்சர்: நீண்ட நாட்களாக சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கேம் சேஞ்சர். ராம்சரனின் இந்த படத்திற்கும், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவரவிற்கும் புஷ்பா 2 படத்திற்கும் தான் கடும் போட்டியின் நிலவி வருகிறது. இதுவும் 2025 ஜனவரி மாதம் வெளிவர இருக்கிறது. கேம் சேஞ்சர் படத்தால் பல படங்கள் பின்வாங்கி வருகிறது.

குபேரா: நாகார்ஜுனா மற்றும் தனுஷ் இருவரும் நடிப்பில் மிரட்டி கொண்டிருக்கும் படம் குபேரா. இந்த படமும் அடுத்த பொங்கலுக்கு ரிலீஸ்ஷாக ரெடியாகிக் கொண்டிருக்கிறது. தனி ஒருவன் 2 மற்றும் இந்தியன் 3 போன்ற படங்கள் வெறும் பேச்சு அடிப்படையில் தான் இருக்கிறது.

ரெட்டை தல: மான்கராத்தே, கெத்து போன்ற படங்களை எடுத்தவர் திரு குமரன். இப்பொழுது இவர் அருண் விஜய்யை வைத்து இந்த படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே பாலா இயக்கத்தில் அருண் விஜய் வணங்கான் படத்தில் நடித்து முடித்துவிட்டார். அந்த படம் ரிலீஸ் ஆக காத்துக் கொண்டிருக்கிறது.

Leave a Comment