வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பஞ்ச் டயலாக்கால் மோதிக்கொண்ட அஜித், விஜய்யின் 5 படங்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் வெளிவரும் வாரிசு VS துணிவு

அஜித்-விஜய் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தாலும், அவர்களது ரசிகர்களும் இன்றளவும் எலியும் பூனையும் சண்டையிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதிலும் சமூக வலைதளங்களில் தல தளபதி ரசிகர்கள் கட்டி உருளுகின்றனர்.

இதற்கு மறைமுகமாக அஜித், விஜய் இருவரும் ஒரு காரணமாக இருக்கிறார்கள். ஏனென்றால் காலகாலமாக இவர்களது படங்களில் ஒருவர் மற்றவரை தாக்கும் அளவுக்கு பஞ்ச் டயலாக்கை பேசி ரசிகர்களை வெறியேற்றுவார்கள். அப்படிதான் விஜய் புதிய கீதை படத்தில் ‘உன்னோட தல, வால் எல்லாத்தையும் வர சொல்லு நான் இங்கேயே இருக்கிறேன்’ என்று அஜித்தை தாக்கி பேசியிருப்பார்.

Also Read: வெளிநாடுகளில் வியாபாரம் ஆகாத துணிவு.. ஓவர்சீஸ் பிசினஸில் வாரிசை 50% கூட தொடமுடியாத அஜித்

அங்கு பிடிச்ச தீ தான் இப்போது வரை தொடர்கிறது. அஜித்தும் சளைத்தவர் அல்ல. அவருடைய படங்களிலும் ஏகப்பட்ட பஞ்ச் டயலாக் விஜய்யை வைத்து தாக்கி பேசி இருப்பார். அதிலும் அட்டகாசம் படத்தில் ‘உனக்கென்ன உனக்கென்ன’ என்ற பாடலில் ‘நான் ஹிட்லரா இருந்தா உனக்கு என்ன! புத்தனா இருந்தா உனக்கு என்ன!’ என்று சொல்லி இருப்பார்.

அதற்கு பதிலடியாக விஜய் ‘சச்சின்’ படத்தில் ‘நான் ஹிட்லராகவும் இருக்கத் தேவையில்லை, புத்தராகவும் இருக்க தேவையில்லை’ என்று பதில் கொடுத்திருப்பார். மேலும் திருமலை படத்தில் விஜய் ‘வாழ்க்கை ஒரு வட்டம் அதில் கீழ இருக்கிறவன் மேலே போவான், மேலே இருக்கிறவன் கீழே வருவான்’ என பஞ்ச் பேசி இருப்பார்.

உடனே அஜித் ‘ஜனா’ படத்தில் ‘வாழ்க்கை ஒரு வட்டமோ சதுரமோ இல்ல, அது அங்கே தான் இருக்கும்’ என்று விஜய் பேசிய டயலாக்-க்கு எதிர் பஞ்ச் கொடுத்திருப்பார். இப்படி மாறி மாறி ஒருவர் மற்றொருவரை தாக்கி படங்களில் பேசி ரசிகர்களையும் மோத விட்டிருப்பது ஒரு கட்டத்தில் எல்லை மீறியது.

Also Read: அஜித்தின் தூக்கத்தை கெடுத்த வாரிசு படத்தின் ஓவர் ஆல் பிஸ்னஸ்.. ரிலீஸுக்கு முன்பே டஃப் கொடுக்கும் தளபதி

அந்த சமயத்தில் அஜித்துக்கு படம் இல்லாமல் போனது. அவருடைய கேரியரில் பெரும் பின்னடைவை சந்தித்துக் கொண்டிருந்தார் என்கின்ற போது தான் வெளியான படம் பில்லா. இந்த படம் அஜித்துக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது. அந்தப் படத்தில் அஜித் ‘ஐ அம் கம் பேக் (I am come back)’ என்று குறிப்பிட்டு தெறிக்க விட்டிருப்பார்.

உடனே அஜித் சொன்னதற்கு நெத்தியடி பதிலாய் துப்பாக்கி படத்தில் விஜய் ‘ஐ அம் வெயிட்டிங் (I am waiting)’ என்று பதில் கொடுத்தார். இப்போது 8 வருடம் கழித்து மீண்டும் தல தளபதியின் படங்கள் ஒரே நாளில் திரைக்கு வருகிறது. வரும் பொங்கலன்று தல அஜித்தின் துணிவு படமும், தளபதி விஜயின் வாரிசு படமும் ரிலீஸ் ஆகிறது.

Also Read: அஜித்தால் அந்த ஒரு விசியத்தில் விஜய்யை நெருங்க கூட முடியாது.. சர்ச்சையை ஏற்படுத்திய சினிமா பிரபலம்

இந்தப் படத்தில் இருவரும் ஒருவர் மற்றவரை தாக்கி என்னென்ன பஞ்ச் டயலாக் பேசி சமூகம் வலைதளங்களில் ரசிகர்களை மோத விட போகிறார்களோ என்று பீதியில் இருக்கின்றனர்.

Trending News