திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சுதந்திர தினத்தை குறிவைத்த 5 படங்கள்.. சிறுத்தைகளுடன் மோத போகும் சில்வண்டு கவின்

August 15 Release Movies: ஜூலை மாதத்திற்கு பின் அடுத்தடுத்து வரப் போகும் பண்டிகை நாட்களில் வரிசை கட்டி நிற்கிறது தமிழ் படங்கள். மே ஒன்று உழைப்பாளர்கள் தினத்திற்கு அப்புறம் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் எந்த ஒரு பண்டிகை நாட்களும் இல்லை. அதனால் ஆகஸ்ட்15ஆம் தேதியை குறி வைத்து ஐந்து படங்கள் காத்துக் கொண்டிருக்கிறது.

பெரிய பட்ஜெட் படமாகிய புஷ்பா 2 இந்த தேதியில் வெளி வருகிறது என்ற பேச்சுக்கள் அடிபட்டது. அதனால் சின்ன படங்கள் எல்லாம் விலகியது. இப்பொழுது புஷ்பா படத்தின் சூட்டிங் இன்னும் நிறைவடையவில்லை, அதனால் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் அன்று இந்த படம்வெளிவரப் போவதில்லை . இது டிசம்பர் 6ஆம் தேதி தள்ளிப் போய் உள்ளது .

தங்களான்: பா ரஞ்சித், விக்ரமை கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக நொங்கை பிதுக்கி வேலை வாங்கி கொண்டிருக்கும் படம் தங்களான்.மொத்த உழைப்பையும் விக்ரம் இந்த படத்திற்காக செலவழித்து இருக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் 15 ரிலீஸ் ஆகிறது.

வணங்கான்: பாலா இந்த படத்தை ஒரு மாறுபட்ட கதையாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார். மொத்த வித்தையையும் அருண் விஜய் இந்த படத்தில் காட்டி நடித்திருக்கிறார் .அவருக்கு கேரியர் பெஸ்ட்டாக இந்த படம் அமையும் என பட குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.

மெய்யழகன்: ரொம்ப வருடங்களாக ஒரு ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார் கார்த்தி. பையா, சிறுத்தை படங்களுக்கு அப்புறம் இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி ஹிட்படங்கள் இல்லை . காமெடி கலந்த கதையை கையில் எடுத்து சுதந்திரமாக வருகிறார் கார்த்தி

காதலிக்க நேரமில்லை: இரண்டு வருடங்களாக உதயநிதி மனைவி கிருத்திகா இந்த படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது தான் இதற்கு ஒரு விடிவு காலம் வந்து இருக்கிறது. இதுவும் காமெடி கலந்த படமாக தான் தெரிகிறது. இந்த படமும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தான் நல்ல நாள் பார்த்து இருக்கிறது.

சிறுத்தைகளுடன் மோத போகும் சில்வண்டு கவின்

பிளடி பெக்கர்: சமீபத்தில் இளம் ஹீரோக்கள் பலரை ஓவர் டேக் செய்து நடிப்பில் மிரட்டி வருபவர் பிக் பாஸ் கவின். இவரும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை தன்னுடைய படங்களை ரிலீஸ் செய்து கொண்டுதான் இருக்கிறார்.நெல்சன் தயாரிப்பில் ப்ளடி பெக்கர் என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படமும் சுதந்திர தினத்தை தான் குறி வைக்கிறது

Trending News