புதன்கிழமை, நவம்பர் 6, 2024

70களிலிருந்து இன்று வரை தமிழ் சினிமாவின் 5 ஜென்டில்மேன்ஸ்.. கண்ணியம் தவறாத ரஜினியின் நண்பர்

Gentleman Heroes: திரை உலகில் இருக்கும் முன்னணி கதாநாயகர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிலர் மற்றவர்களிடம் மிகவும் கடுமையாவும் நடந்து கொள்வார்கள், அது அவர்களின் நடவடிக்கைகளிலேயே பார்க்கலாம். ஆனால் சிலர் அப்படி இருப்பதில்லை அனைவரிடமும் தன்மையாக நடந்து கொள்வார்கள். அப்படி 70 களில் இருந்து தற்போது வரை சினிமாவில் உள்ள 5 ஜென்டில்மேன்கள் யார் என பார்க்கலாம்.

ஜெய்சங்கர்: மக்கள் கலைஞர், மக்கள் தமிழன், தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என அழைக்கப்படும் ஜெய்சங்கர் இதில் ஒருவர். இவர் சிவாஜி கணேசன், எம் ஜி ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், ஜெமினிகணேசன் போன்றவர்களை மேற்கத்திய கதாபாத்திரங்கள் மூலம் ஆதிக்கம் செய்தவர். இவர் 1965இல் “இரவு பகலும்” எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். என்னதான் இவர் பெரிய ஹீரோவாக இருந்தாலும் கூட, அனைவருடனும் சகஜமாக பழகுவார்.

Also Read:அடேங்கப்பா ஜெயம் ரவியின் சொத்து மதிப்பு இவ்வளவா!. தனி ஒருவனாக சாதித்து காட்டிய ஹீரோ

முரளி: 1984இல் “பூவிலங்கு” என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் முரளி. ஆரம்ப காலகட்டத்தில் கன்னட திரைப்படங்களின் நடித்திருந்தாலும், அது பெரிதாக எதுவும் கை கொடுக்கவில்லை. அதன் பிறகு தமிழில் நிறைய படம் வாய்ப்பு கிடைத்தது, அதை பயன்படுத்திக்கொண்டு ஏராளமான படங்கள் நடித்துள்ளர், விருதுகளும் பெற்றுள்ளார். அனைவருக்கும் மரியாதை குடுத்து , யாருக்கும் கஷ்டம் குடுக்கமால் நடந்து கொள்ளும் நல்ல மனிதர்.

மம்முட்டி: மலையாள திரை உலகின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் மம்முட்டியும் இந்த லிஸ்டில் ஒருவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, இங்கிலீஷ் போன்ற மொழிகளிலும் 400க்கு மேற்பட்ட திரைப்படங்கள் நடித்துள்ளர். பத்மஸ்ரீ போன்ற விருது பெற்றுள்ளார். பெரிய ஹீரோவாக இருந்தாலும் ரசிகர்களிடம் எந்த ஆணவமும் இல்லாமல் எளிமையாக நடந்து கொள்வார். இவருக்கு இணையாக தமிழில் இருக்கும் ரஜினிகாந்த்தும், இவரும் அப்போதிலிருந்து நண்பர்கள் . வருடங்கள் பல அனாலும் தற்போது வரை நல்ல நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள்.

Also Read:நடிகையின் எதிர்பாராத கர்ப்பம், அம்மாவுடன் சென்று கருவை கலைத்த கொடுமை.. தப்பையும் செஞ்சிட்டு சப்பை கட்டு கட்டுறீங்க

நெப்போலியன்: குமரேசன் துரைசாமி என அழைக்கப்படும் நெப்போலியன் இதில் ஒருவர். இவர் பெரும்பாலும் தமிழில் தான் திரைப்படங்கள் அதிகம் நடித்துள்ளார். இவர் “புது நெல்லு புது நாத்து” என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். கலைமாமணி, எம்ஜிஆர், தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் போன்ற விருதுகளையும் வாங்கி உள்ளார். மற்றவர்களை தன்மையாக நடத்தும் இவரின் செயல்கள் ஜென்டில்மேன் என்று சொல்லும் அளவுக்கு இருக்கும்.

அஜித்: தமிழ் சினிமாவில் தன்னடக்கத்துக்கும், எளிமைக்கும் பேர் போனவர் தான் அஜித். ரசிகர்களிடமும், சக கலைஞர்களிடமும் மரியாதையுடன் பழகும் இவர், கண்ணியத்திற்கும் பேர் போனவர். எந்த ஒரு ஆடம்பரமும், இல்லாமல் சகஜமாக பழகக் கூடியவர்.  தனது ஆரம்ப காலகட்டத்தில் இருந்து எந்த உதவியும் இல்லாமல் தன் சொந்த முயற்சியினால் மேலே வந்ததால், பிறருக்கு உதவி செய்யும் நல்ல எண்ணம் கொண்டவர்.

- Advertisement -spot_img

Trending News