ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

விஜய்யை மிஞ்ச ரஜினி நடிக்கப் போகும் 5 பிரம்மாண்ட இயக்குனர்கள்.. பட்ஜெட் 1500 கோடி, அப்படின்னா வசூல்?

Rajini interested to act 5 top directors: பொதுவாக தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் இரண்டு நடிகர்களுக்கு இடையே போட்டி நிலவிக் கொண்டு வரும். அப்படி ரஜினி கமல் மற்றும் அஜித் விஜய் என்று போட்டி போட்டு வந்தார்கள். ஆனால் தற்போது ரஜினி மற்றும் விஜய் மோதிக் கொள்ளும் அளவிற்கு நடித்து வருகிறார்கள். அதுவும் எப்படி என்றால் யாருடைய படம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறது. எந்த அளவிற்கு வசூலில் சாதனை புரிகிறது என்பதை வைத்து மோதிக் கொள்கிறார்கள்.

ஆனாலும் ரஜினி அவருடைய 72 வயசிலும் கொஞ்சம் கூட துவண்டு விடாமல் விஜய்க்கு போட்டியாக ஈடு கொடுத்து வருகிறார். இன்னும் சொல்ல போனால் விஜய்யை மிஞ்சும் அளவிற்கு ஒவ்வொரு படங்களிலும் வெற்றி அடைகிறார். அதனால் தொடர்ந்து விஜய்யை தோற்கடிக்க வேண்டும் என்று ரஜினி ஐந்து பிரம்மாண்ட இயக்குனர்களுடன் கூட்டணி வைக்கப் போகிறார்.

அந்த வகையில் ரஜினி ஆசைப்பட்டு நடிப்பதற்கு ஐந்து இயக்குனர்களிடம் பேசி இருக்கிறார். அவர்கள் யார் என்றால் ஜெயிலர் படத்தின் மூலம் மிகப்பெரிய வசூல் சாதனையை பெற்றுக் கொடுத்த நெல்சன். இவரிடம் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Also read: பேரனாலும் சிக்கலை சந்தித்த ரஜினி.. இந்த வயசிலேயே அலும்பு பண்ணிய தனுஷின் வாரிசு

அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே பேட்ட படம் வெளி வந்திருக்கிறது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் ரஜினிக்கு ஒரு மாஸ் படமாக கை கொடுத்து வசூல் அளவில் லாபத்தை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் மறுபடியும் இவருடன் ரஜினி நடிக்கப் போகிறார். அடுத்ததாக காபி கதையை எடுத்தாலும் அந்த படத்தின் மூலம் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வரும் இயக்குனர் அட்லி.

இவருடன் ரஜினி ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று ஆசையுடன் காத்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனரான மணிரத்தினம் இயக்கத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்கிறார். இவர்கள் கூட்டணியில் 1991 ஆம் ஆண்டு தளபதி படம் வெளியானது. இப்படம் ரஜினி கேரியரில் மிகப்பெரிய டர்னிங் பாயிண்டாக அமைந்தது. அதனால் மறுபடியும் ஒரு படத்தில் நடித்து விட வேண்டும் என்று ஆசைடன் காத்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக இயக்குனர் ஷங்கருடன் இணைவதற்கு தயாராக இருக்கிறார். இப்படி இந்த ஐந்து இயக்குனர்களுடன் நடிக்க வேண்டும் என்று ஆசையுடன் ரஜினி காத்திருக்கிறார். அதே நேரத்தில் பட்ஜெட்டும் 1500 கோடி கிட்ட மிகப் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அந்த வகையில் பட்ஜெட்டை 1500 கோடி என்றால் வசூல் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை கணக்கு போட்டு ரஜினி காய் நகர்த்தப் போகிறார்.

Also read: ரஜினியின் வியாபாரத்தை ஆட்டம் காண வைத்த கேப்டனின் 3 படங்கள்.. பெரிய ஆளா இருப்பாரு போலயே!

Trending News