இந்த அஞ்சு பேருல தேசிய விருது வாங்க தகுதியான ஒரே ஹீரோ.. வேற யாரையும் வச்சு யோசிக்க கூட முடியாது

National Award Deserves Actors: 2021 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான 69வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் அறிவிக்கப்பட உள்ளன. இதில் சிறந்த தமிழ் நடிகருக்கான தேசிய விருது 5 நடிகருள் ஒருவருக்கு தான் கிடைக்கப் போகிறது. அது யார் என்பதை தற்போது உறுதியாகி இருக்கிறது.

கடந்த 68வது தேசிய விருது சூரரைப் போற்றும் படத்திற்காக சூர்யாவிற்கு கிடைத்தது. அதேபோல் இந்த முறை ஜெய் பீம் படத்திற்காக சூர்யாவும், கர்ணன் படத்திற்காக தனுஷ், சார்பட்டா பரம்பரைக்காக ஆர்யாவும், வினோதய சித்தம் படத்தை இயக்கி நடித்த சமுத்திரக்கனி, மாநாடு படத்திற்காக சிம்பு ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

Also Read: 69வது தேசிய விருது சூர்யா மகுடம் சூடுவாரா.? டஃப் கொடுத்திருக்கும் ரெண்டு டாப் ஹீரோக்கள்

ஆனால் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் சாதி ஏற்றத்தாழ்வையும் அடக்கு முறையையும் வெளிப்படுத்திய படமாக இருந்தது. இந்த படத்தில் தனுஷ் இல்லையென்றால் வேறு ஏதாவது ஒரு ஹீரோ நிச்சயம் நடித்து இதே அளவிற்கு ஹிட் கொடுத்திருக்க முடியும்.

அதேபோல் தான் சூர்யா நடித்த ஜெய் பீம் படத்தில் நடித்த வழக்கறிஞர் கேரக்டரை, இதற்கு முன்பு அஜித் இளம் பெண்களுக்காக போராடிய நேர்கொண்ட பார்வை படத்திலும் நடித்துக் காட்டியிருப்பார். அதேபோல் தான் மாநாடு, வினோதய சித்தம் படத்தையும் வேறு எந்த நடிகர்களாலும் எளிதாக நடித்திருக்க முடியும். ஆனால் சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவின் கதாபாத்திரம் அப்படி கிடையாது.

Also Read: நடிப்பு இல்லைனாலும் பட வாய்ப்புக்கு மட்டும் குறைச்ச இல்ல.. வாரிசு நடிகை என்பதால் சூர்யாவுக்கு ஜோடியாகும் வாய்ப்பு

பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கபிலன் கேரக்டர் ஆர்யாவிற்காகவே செதுக்கப்பட்டது போல் இருந்தது. இந்த படத்திற்காக அவர் தன்னுடைய உடல் அமைப்பை மாற்றி அந்த கேரக்டர்காக கடுமையான பயிற்சியும் மேற்கொண்டார். கபிலன் கேரக்டரில் ஆர்யாவை தவிர வேற யாரையும் வச்சு யோசிக்க கூட முடியாது.

ஆகையால் நிச்சயம் இந்த முறை தேசிய விருது ஆர்யாவிற்கு கிடைத்தாக வேண்டும், அதுதான் நியாயமாக இருக்கும். எனவே இன்னும் ஒரு சில மணி நேரத்திற்குள் இந்த வருடத்திற்கான தேசிய விருது யாருக்கு கிடைக்கிறது என்பது தெரிந்து விடும். ஆனால் களத்தில் இருக்கும் மூன்று படங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது நிச்சயம் அது ஆர்யாவிற்கு தான் கிடைக்கும் என்பது உறுதியாகிவிட்டது.

Also Read: சிம்புவிற்கே டஃப் கொடுத்த அக்கட தேச நடிகர்.. ஜெயிலருக்கு இணையாய் பார்க்கப்படும் நரசிம்மன்