வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

டான்ஸ் ஆடியே மார்க்கெட்டை பிடித்த 5 ஹீரோக்கள்.. உச்சத்தை தொட்டு பார்த்த பிரபுதேவா

தமிழ் சினிமாவில் நுழைவதற்கு பல வழிகள் இருந்தாலும், திறமை இருந்தால் மட்டுமே நிலைக்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை. அதிலும் நடனம் ஆடியே ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் மார்க்கெட்டை படித்த 5 நடிகர்களை பற்றி பார்ப்போம்.

பிரசாந்த்: இயக்குனரும் நடிகரமான தியாகராஜனின் மகளாக சினிமாவிற்கு அறிமுகமான பிரசாந்த் நடித்த முதல் படம் வைகாசி பொறந்தாச்சு. இந்த படத்திற்குப் பிறகு செம்பருத்தி, ஜீன்ஸ், ஜோடி, வின்னர் போன்ற ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து டாப் ஹீரோவாக வலம் வந்த இவர் நடனத் திறமையினாலே வெகு சீக்கிரம் ரசிகர்களை கவர்ந்து, மார்க்கெட்டிங் உச்சத்துக்கே சென்றவர்.

பிரபுதேவா: நடன ஆசிரியர் சுந்தரின் மகனாக சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த இவர், வேகமாக நடனமாடும் திறமைக்காக இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் பெருமைப்படுத்தப்பட்டவர். இதுவரை 100 படங்களுக்கு மேல் நடனம் ஆடியுள்ள இவர், மின்சார கனவு படத்தில் இடம்பெற்ற ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடலில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியதால் சிறந்த நடன ஆசிரியருக்கான தேசிய திரைப்பட விருதையும் தட்டி தூக்கினார். இதன் பின் ஏகப்பட்ட படங்களுக்கு நடன ஆசிரியராக பணியாற்றிய இவர், டாப் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்து மார்க்கெட்டை எட்டிப் பிடித்தார்.

Also Read: பிரபுதேவாவை தூக்கிவிட்ட 5 இயக்குனர்கள்.. நடனத்தில் இருந்து நடிகன் அந்தஸ்தைக் கொடுத்த படங்கள்

ராகவா லாரன்ஸ்: ஜென்டில்மேன் படத்தில் பின்னணி நடன கலைஞராக பணியாற்றிய இவர், சின்ன மேடம் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி ரசிகர்களிடம் பரிச்சியமானார். அதன் பின் அமர்க்களம் படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்த ராகவா லாரன்ஸ் நடனமாடியே ரசிகர்களை கவர்ந்ததுடன் கதாநாயகனாக நடிப்பதற்கான அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் பெற்றார்.

பெரும்பாலும் சிறப்பு தோற்றங்களில் நடித்துக் கொண்டிருந்த ராகவா லாரன்ஸ் 2007 ஆம் ஆண்டு வெளியான முனி என்கின்ற திரில்லர் படத்தில் நடித்ததன் பின் அடுத்தடுத்து காஞ்சனா சீரிஸ் மூலம் இப்போது வரை ரசிகர்களை மிரட்டும் டாப் ஹீரோவாக மார்க்கெட் குறையாமல் வலம் வருகிறார்.

Also Read: நக்மாவை நடுரோட்டில் கழட்டிவிட்ட பிரபுதேவா.. மறுவாழ்வு கொடுத்த இயக்குனர்

பரத்: இவருடைய நடனத் திறமையினால் பாய்ஸ் படத்திற்கு பிறகு முன்னணி கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றார். அதிலும் இவர் நடிப்பில் வெளியான காதல், பிப்ரவரி 14, எம் மகன் வெயில் போன்ற வரிசையாக பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து மார்க்கெட்டை பிடித்தவர்.

நகுல்: நடிகை தேவயானியின் தம்பியான இவர், சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் முன்னணி கதாநாயகனாக நடித்து அந்தப் பாடத்தில் பாடலும் பாடினார். அதன்பின் இவருடைய டான்ஸ் திறமையினாலேயே அடுத்தடுத்த பட வாய்ப்புகளைப் பெற்று மார்க்கெட்டை பிடித்தவர்.

Also Read: அப்பா முன் அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர்.. புத்திசாலித்தனமாக பழிவாங்கிய பிரபுதேவா

இந்த 5 நடிகர்களும் அழகுடன் கூடிய நடனத் திறமையினாலேயே தங்களை நிரூபித்தது அதை வைத்தே மார்க்கெட்டை பிடித்தவர்கள். அதிலும் பிரபுதேவா தேசிய விருதையும் பெற்ற பெருமைக்குரியவர் ஆவார்.

Trending News