திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கொஞ்சம் கூட செட் ஆகாத கதாபாத்திரத்தில் நடித்த 5 ஹீரோக்கள்.. விட்டதை பிடிக்க வேறு யுத்தியை கையாளும் வடிவேலு

Comedian Vadivelu: தன் திறமையால் வாய்ப்பு பெற்றவர்கள் ஏந்த கதாபாத்திரம் ஏற்றாலும் அதை சிறப்புற நடித்துக் விடுவார்கள். அவ்வாறு இல்லாமல், சினிமாவில் நடிக்கும் ஆசையை கொண்டு செட்டாகாத கதாபாத்திரத்தில் நடித்து மொக்கை வாங்கிய ஹீரோக்கள் பற்றிய தகவலை இங்கு காண்போம்.

இந்த வரிசையில் முதலில் வடிவேலு, தன் நகைச்சுவை உணர்வால் தமிழ் சினிமாவில் தனக்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டவர் வடிவேலு. தன் திறமையால் படிப்படியாக முன்னேறி சிறந்த நகைச்சுவை நடிகராய் வலம் வந்தவர். அவ்வாறு இருக்க, தற்போது இவர் மேற்கொள்ளும் புது முயற்சி தான் குணச்சித்திர கதாபாத்திரம்.

Also Read: நஸ்ரியா மட்டும் இல்லன்னா பகத்துக்கு முத்தம் கொடுத்திருப்பேன்.. ஓப்பனாக ஆசையை வெளிப்படுத்திய நடிகை

சமீபத்தில் மாமன்னன் படத்தில் இவர் மேற்கொண்ட சீரியஸ் கதாபாத்திரம் இவருக்கு செட் ஆகவில்லை. ஒரு நகைச்சுவை நடிகராக இவரை பார்த்து விட்டு தற்போது குணசித்திர நடிகராய் ஏற்க மறுக்கிறார்கள். இருப்பினும் தன் முயற்சியை இப்படத்தில் வெளிக்காட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவரை போன்று சிறந்த காமெடியனாய் வலம் வந்தவர் சந்தானம். தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட இவர் கதாநாயகனாக புது அவதாரம் எடுத்து வாய்ப்பு இழந்து காணப்படுகிறார். அதன் பின் எந்த படமாக இருந்தாலும், அந்த கதாபாத்திரத்திற்கான உணர்ச்சியை முகத்தில் வெளிக்காட்டத் தெரியாதவர் உதயநிதி ஸ்டாலின்.

Also Read: குடும்பப் பிரச்சினையை வைத்து குளிர் காய நினைக்கும் விஜய் டிவி.. பிக் பாஸை நாரடிக்கப் போகும் 3 சர்ச்சையான ஜோடிகள்

அவ்வாறு இவர் மேற்கொண்ட ஆக்சன் படங்கள் இவருக்கு காமெடியாய் அமைந்தது. மேலும் பாலிவுட் லெவலில் தன் நடிப்பினை மேற்கொண்டு வரும் விஜய் சேதுபதி ஏற்ற படங்களில், பிளேபாய்யாய் இவர் மேற்கொண்ட கேரக்டர் மக்களிடையே பெரிதளவு விமர்சனத்தை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் கமல் தற்பொழுது மேற்கொள்ளும் படமான ப்ராஜெக்ட் கேவில் பிரபாஸிற்கு வில்லனாக களம் இறங்குகிறார். இதுவரை இது போன்ற கதாபாத்திரம் ஏற்காத நிலையில், தற்போது இவர் போடும் புது முயற்சி இவருக்கு வெற்றியை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also Read: 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாகும் கவுண்டமணி.. அரசியல் டைட்டிலுடன் வெளியான போஸ்டர்

Trending News