புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பணத்தை வாங்கி தயாரிப்பாளர்களை டீலில் விட்ட 5 ஹீரோக்கள்.. அட்வான்ஸ் தொகையை ஏப்பமிட்ட எஸ்ஜே சூர்யா

SJ Surya: முந்தைய காலங்களில் சினிமாவில் இருக்கும் நடிகர்கள், நடிகைகளை பற்றி எந்த விஷயங்களும் வெளியில் தெரியாதபடி கமுக்கமாக இருக்கும். ஆனால் தற்போது இதற்கு எதிர் மாறாக அவர்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்களும் அப்பட்டமாக தெரிந்து விடுகிறது. அதற்கு காரணம் சோசியல் மீடியா ரொம்பவே வைரலாகி கொண்டு வருவதால் தான்.

அப்படித்தான் சில நடிகர்கள் தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் ஆக பணத்தை வாங்கிவிட்டு அவர்களை டீலில் விட்டு விடுவது ஒவ்வொன்றாக தெரிய வருகிறது. அப்படி தயாரிப்பாளர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு ஏப்பமிடும் ஹீரோக்களை பற்றி பார்க்கலாம். அந்த வகையில் தயாரிப்பாளர் சங்கத்தின் பொறுப்பில் இருந்து கொண்டே பல தில்லு முல்லு வேலைகளை பார்த்து வருகிறார் விஷால்.

Also read: விஷால் இப்போ ஹேப்பி அண்ணாச்சி.. வசூலில் பட்டய கிளப்பும் மார்க் ஆண்டனி, 4வது நாள் நிலவரம்

அதாவது நடிகர் விஷால், தயாரிப்பாளர் லைக்காவிடம் சில ஒப்பந்தங்களை போட்டு 21 லட்சம் அட்வான்ஸ் ஆக வாங்கி அவருக்கு இருந்த கடனை அடைத்திருக்கிறார். அதன் பின் லைக்காவிடம் போட்ட ஒப்பந்தத்தை மறந்து விட்டு அவரை ஏமாற்றி விட்டார். இதனால் அவர் கோர்ட் வரை சென்று விஷாலை உண்டு இல்லன்னு ஆக்கிவிட்டார்.

அடுத்தபடியாக சிம்புவை பற்றி சொல்லவே வேண்டாம் சர்ச்சைக்கும், பிரச்சினைக்கும் மொத்த உருவமாக இருந்து வருகிறார். அதாவது அடங்காதவன் அசராதவன் அன்பானவன் படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பனுக்கு சொன்ன பட்ஜெட்டுக்கும் மேல் அதிக செலவை இழுத்து வைத்து ஏறக்குறைய நடுத்தெருவில் நிற்கும் நிலைமைக்கு தள்ளிவிட்டார். இதனால் அந்த தயாரிப்பாளர் மிகவும் அல்லோலபட்டு வருகிறார்.

Also read: தயாரிப்பாளர்களை கோர்ட், கேஸ்னு சுத்தலில் விடும் சிம்பு.. காசுக்காக இறங்கி நடிச்ச விளம்பரம்

அடுத்ததாக இந்த நடிகரும் இதே லிஸ்டில் சேர்ந்து விட்டாரா என்ற ஆச்சரியப்படும் அளவிற்கு தனுஷ் நிலைமை இருக்கிறது. அதாவது இவரும் தயாரிப்பாளர் முரளி ராமசாமி கூட்டணியில் ஒரு படத்தை எடுத்தார். ஆனால் அது பாதியிலேயே நின்னு போயி பணப்பிரச்சினையால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதனால் தனுஷை நம்பி அதால பாதாளத்திற்குள் தயாரிப்பாளர் போய்விட்டார். அடுத்தபடியாக அதர்வா, தயாரிப்பாளர் மதியழகன் இடம் அட்வான்ஸ் தொகையாக 45 லட்சம் ரூபாயை 2018 ஆம் ஆண்டு வாங்கி இருக்கிறார்.

அந்த தயாரிப்பாளரும் இவர் கால்ஷீட் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் பணத்தை கொடுத்து விட்டார். ஆனால் இன்னும் வரை அதர்வாவிடம் இருந்து எந்த வித பதிலும் வராமல் தயாரிப்பாளரை சுற்ற வைக்கிறார். அடுத்ததாக எஸ்ஜே சூர்யா, தயாரிப்பாளர் ஒருவரிடம் கிட்டத்தட்ட 35 லட்ச ரூபாயை அட்வான்ஸ் தொகையாக வாங்கிவிட்டு அவரை ஏமாற்றி இருக்கிறார். இதனால் இவரிடம் மாட்டிக் கொண்டு அந்த தயாரிப்பாளர் படாத பாடு பட்டு வருகிறார்.

Also read: கமலஹாசனால் வெளியில் தலை காட்ட முடியாத நிலைமை.. இது என்னடா சிம்புவுக்கு வந்த சோதனை

Trending News