வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வளர்ந்தும் வளராமலும் கெத்து காட்டும் 5 ஹீரோக்கள்.. ஜெய்யை நம்பி பணத்தை தண்ணியாக செலவழிக்கும் தயாரிப்பாளர்

Over Attitude Actor’s: சினிமாவில் சாதித்தவர் கூட இந்த அளவுக்கு ஆட்டம் போட மாட்டார்கள். ஆனால் தற்போது ஓரளவுக்கு வளர்ந்து வரும் சில நடிகர்கள் வளர்ந்தும் வளராமல் ஓவராக அலப்பறையை கூட்டி வருவார்கள். அப்படிப்பட்ட நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

பரத்: இவர் சினிமாவில் நுழைந்ததுமே இவருடைய நடிப்பால் வெற்றியை பார்த்து விட்டார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வளர்ந்து வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், அப்படியே புஸ்வானம் மாதிரி இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார். ஒரு ஹீரோவுக்கு தேவையான அனைத்துமே இவரிடம் இருந்தாலும் வளர முடியவில்லை. ஆனால் இவரிடம் இருக்கும் கெத்து மட்டும் குறையாமல் உலா வருகிறார்.

Also read: சிக்ஸ் பேக் வைத்து பிரயோஜனம் இல்லாத 5 நடிகர்கள்.. தொடர் தோல்விகளை கொடுத்து வரும் காதல் பரத்

அதர்வா: இவர் சினிமாவுக்கு வந்தது இவருடைய அப்பாவின் புகழால் தான். ஆனால் அதன் பிறகு இவருடைய திறமையை காட்டி முன்னுக்கு வர வேண்டும் என்று படாத பாடுபட்டு வருகிறார். அட்லீஸ்ட் சினிமாவில் இவருடைய அப்பா எடுத்த பெயர் மாதிரியாவது தானும் எடுக்க வேண்டும் என்று தவித்து வருகிறார். அதற்காக முயற்சியுடன் நடித்து வருகிறார்.

கவின்: இவர் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் ஹீரோ. குறுகிய காலத்தில் ரசிகர்களையும் பட வாய்ப்பு எக்கச்சக்கமாக தக்க வைத்துக் கொண்டார். அதனால் தான் என்னமோ இவருடைய படங்களில் என்ன சம்பளம் வேண்டும் என்று டிமாண்ட் செய்யும் அளவிற்கு கெத்து காட்டுகிறார். இவரை தேடி வரும் தயாரிப்பாளர் இடம் இரண்டு கோடி வேண்டுமென்று அடம்பிடிக்கிறார்.

Also read: விஜய், சிவகார்த்திகேயன் இடத்தை பிடிக்கும் கவின்.. அடுத்தடுத்து இணையும் மெர்சல் கூட்டணி

ஆரி: புத்தியுள்ள பிள்ளை தான் பிழைக்க முடியும் என்று சொல்வார்கள் அது இவருடைய விஷயத்தில் பொருத்தமாக இருக்கிறது. இப்படி ஒரு நல்லவராக இருக்க முடியுமா என்று வியந்து பார்த்த ஒரு நடிகர் தான் ஆரி. இவர் நேர்மை, ஒழுக்கம் என்று கட்டுக்கோப்புடன் இருக்கக்கூடியவர். அப்படிப்பட்ட இவரால் சினிமாவில் வளர முடியாமல் போராடி வருகிறார்.

ஜெய்: இவரை பார்ப்பதற்கு ஹீரோ லுக் இருந்தாலும் சினிமாவில் இவருக்கென்று ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை. அதற்கு காரணம் இவருடைய தெனாவட்டு தான். ஒரு சில படங்கள் கொஞ்சம் ஹிட் ஆனதும் ஓவரா பந்தா காட்டி இருக்கக்கூடியவர். அப்பறம் என்ன ஆகுது அடுத்த தொடர்ந்து ஐந்து படங்கள் சொல்லும்படியாக அமையாமல் போகிறது. ஆனாலும் இவருடைய படத்திற்காக இவரை நம்பி தயாரிப்பார்கள் பணத்தை தண்ணியாக வாரி கொட்டுகிறார்கள்.

Also read: கூடா நட்பு கேடாய் போய் முடியும்.. ஜெய்யின் சினிமா வாழ்க்கை சோலி முடிய இந்த 2 நடிகைகள் தான் காரணம்

Trending News