ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

வந்த சுவடு தெரியாமலேயே சுற்றித் திரியும் 5 ஹீரோக்கள்.. மொத்தமாக கேரியரை தொலைத்த ஜீவா 

5 Heroes Who lost Cinema Carrier: கொஞ்ச காலங்களுக்கு முன் ஏதாவது பண்டிகை தினத்தை ஒட்டி மட்டும் புதுப்புது படங்கள் திரையரங்குகளில் வந்து கொண்டே இருக்கும். ஆனால் தற்போது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறி வைத்து கிட்டத்தட்ட ஐந்து படங்களாவது ரிலீஸ் ஆகி விடுகிறது. அதிலும் கதை நன்றாக இருந்தால் மக்கள் அதை ஏற்றுக் கொண்டு பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

அந்த வகையில் முன்னணி நடிகர்களின் படங்களையும் தாண்டி குறைந்த அளவில் எடுக்கப்பட்ட சின்ன பட்ஜெட் படங்களுக்கும் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால் இந்த சமயத்தில் கூட சில நடிகர்களால் வெற்றி பெற முடியவில்லை. அதற்கு காரணம் அவர்களுடைய நடிப்பு மக்களால் ஏதோ ஒரு விதத்தில் ஏற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டது.

அப்படி சினிமா கேரியரில் கொஞ்சம் கொஞ்சமாக மார்க்கெட்டை தொலைத்து, இருக்கும் இடம் தெரியாமல் வருகிற நடிகர்கள் யார் என்றால் ஜீவா, பரத், கௌதம் கார்த்திக், விமல் மற்றும் சாந்தனு பாக்யராஜ். இவர்கள் நடித்த படங்கள் ஆரம்பத்தில் மக்கள் ரசித்து பார்த்து வந்தார்கள். முக்கியமாக பரத் நடித்த காதல் படம் அவருக்கு அக்மார்க் படமாகவே அமைந்துவிட்டது.

Also read: பரத் கேரியரை தூக்கி நிறுத்திய 5 படங்கள்.. 50 படங்களில் நடித்தும் கிடைக்காத பேர், புகழ்!

அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமான பரத் தொடர்ந்து சினிமாவில் நிலைத்து நிற்க முடியாமல் போய்விட்டது. அந்த வகையில் இந்த ஆண்டும் இப்போது வரை எந்த பட வாய்ப்புகளும் இவரை தேடி வரவில்லை. அடுத்ததாக ரொமான்டிக் முகத்தையும், காதல் படங்களிலும் நடித்து இளைஞர்களை கவர்ந்த நடிகர் தான் ஜீவா. இவர் ஆரம்பகாலத்தில் நடித்த படங்கள் அனைத்தும் அமோக வெற்றி பெற்றது.

ஆனால் இப்போது இவருடைய நடிப்பில் வரும் படங்கள் வந்த சுவடு கூட தெரியாமல் போய்விடுகிறது. அடுத்து என்னதான் அப்பா பெயர் மூலம் சினிமாவிற்கு வந்தாலும் தனித்துவம் காட்ட வேண்டும் என்று படாத பாடுபட்டு வருகிறார்கள் கௌதம் கார்த்திக் மற்றும் சாந்தனு பாக்யராஜ். ஆனாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இதுவரை எந்த வெற்றி படங்களையும் பார்க்கவில்லை.

அடுத்ததாக நடிகர் விமல், கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி பல படங்களில் எதார்த்தமான நடிப்பையும் காமெடியும் கொடுத்து வெற்றி பெற்றார். ஆனால் போகப் போக இவருடைய குடி பழக்கத்தினால் இவரின் திசையை மாறிவிட்டது. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவரும் படங்கள் பெருசாக மக்களிடம் ரீச் ஆகாமலேயே போய்விட்டது.

Also read: தலைக் கனத்தால் அழிந்த கொண்டிருக்கும் 6 ஹீரோக்கள்.. சீட்டிங் கேசில் டேமேஜ் ஆன விமல்

- Advertisement -spot_img

Trending News