வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சிம்புவை விட 10 மடங்கு அதிகமா ஆடிய 5 ஹீரோஸ்.. அப்பவே தயாரிப்பாளர்களை காலி செய்த நவரச நாயகன்

Tamil Heroes: கோலிவுட்டில் சிம்பு தான் பல தயாரிப்பாளர்களின் தலையில் மிளகாய் அரைத்தவர் என குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் இவரை விட 10 மடங்கு ஓவரா ஐந்து ஹீரோக்கள் சினிமாவில் ஆட்டம் போட்டு இருக்கின்றனர்.
,
மைக் மோகன்: ரஜினி, கமல் உச்சத்தில் இருந்த சமயத்தில் தமிழ் சினிமாவை ரவுண்டு கட்டிக் கொண்டிருந்தவர் தான் மைக் மோகன். இவர் தொடர்ந்து வெள்ளி விழா படங்களை கொடுத்து பாக்ஸ் ஆபிஸை ஆட்டம் காண வைத்த பெருமைக்குரியவர். இவர் நடித்த கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை போன்ற படங்கள் அவரை உச்சத்திற்கு அழைத்து சென்றது.

குறிப்பாக கமலஹாசனுக்கு பிறகு அந்த சமயத்தில் அதிக ரசிகைகள் மைக் மோகனுக்கு தான் இருந்தது. இவர் போல ஒரு கணவன் வேண்டும் என இளம் பெண்கள் அப்போது ஏங்கினர். அதனால் இவருடைய ஆட்டமும் அதிகமாச்சு. ஒரு கட்டத்தில் மார்க்கெட்டை சுத்தமாக இழந்த மோகன், வெறுத்து சினிமாவை விட்டு ஒதுங்கினார். இப்போது தன்னுடைய செகண்ட் இன்னிங்சை துவங்கி இருக்கும் மைக் மோகன், விஜய்யின் தளபதி 68 படத்தில் இணைந்திருக்கிறார்.

கார்த்திக்: 80, 90களில் நவரச நாயகனாக வலம் வந்த கார்த்திக் திரையுலகில் இன்னும் மேலே சென்று இருக்க வேண்டியவர். ஆனால் அவருடைய நடத்தையால் எல்லாத்தையும் கெடுத்துக் கொண்டார். அப்பவே பிளேபாயாக இருந்த கார்த்திக் பல தயாரிப்பாளர்களை காலி செய்தவர்.

இவர் படப்பிடிப்புக்கு சரியாக செல்ல மாட்டார், இவருக்காக படப்பிடிப்பு குழுவினர் ஷூட்டிங் ஸ்பாட்டில் காத்துக் கொண்டிருந்தால் இவர் மட்டும் படுக்கையில் தூங்கிக் கொண்டிருப்பார். காலை 7 மணிக்கு ஷூட்டிங் இருக்கு வர சொன்னால் மதியம் 2 மணிக்கு வருவார். இதனாலேயே நிறைய தயாரிப்பாளர்கள் தலையில் துண்டை போடும் நிலை வந்தது.

Also read: 53 வயதாகும் அரவிந்த்சாமியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு.. சினிமா, பிசினஸ் என ரவுண்டு கட்டும் சாக்லேட் பாய்

நெப்போலியன்: 90களில் வில்லனாகவும் ஹீரோவாகவும் ரவுண்டு கட்டிய நெப்போலியன், இப்போது அமெரிக்காவில் விவசாயம் பார்த்து வருகிறார். ஆனால் இவர் சினிமாவில் உச்சத்தில் இருந்த சமயத்தில் இண்ட்ரஸ்ட் இருந்தால் மட்டுமே சூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவேன் என ஓவர் திமிரு காட்டியிருக்கிறார். இவருடைய வருகைக்காகவே நிறைய முறை படப்பிடிப்பு தளம் தயாராக இருந்து, அதன் பின் ‘இன்ட்ரஸ்ட் இல்லை வர முடியாது’ என்று ஷூட்டிங்கை கேன்சல் செய்து இருக்கிறார்.

ரகுவரன் : 80, 90களில் தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருந்தவர் தான் ரகுவரன். இவருடைய தொடக்க கால படங்களான நேருக்கு நேர், அஞ்சலி போன்ற படங்களில் நேர்மறையான குணசத்திர கேரக்டர்களிடம் தான் பெரும்பாலும் நடிக்க விரும்பினார். ஆனால் காலப்போக்கில் அவரை முரட்டு வில்லனாக மாற்றி விட்டனர்.

அதிலும் பாட்ஷா, முதல்வன் போன்ற படங்களில் இவருடைய வில்லத்தனம் பயங்கரமாக இருக்கும். இவர் ஹீரோவாக வேண்டும் என்று தான் சினிமாவிற்குள் நுழைந்தார். ஆனால் வில்லனாக நடித்தது அவருக்கு சுத்தமாகவே பிடிக்கலை. நாளடைவில் அவர் குடிக்கு அடிமையாகி விட்டார்.

அரவிந்த்சாமி: பிரபல தொழிலதிபரின் தத்து மகனான அரவிந்த்சாமி, 90களில் இளசுகளின் சாக்லேட் பாயாக சினிமாவில் வலம் வந்தவர். இவருக்கு இருக்கும் சொத்து சுகத்திற்கு சினிமாவில் நடித்த சம்பாதிக்க வேண்டிய அவசியமே இல்லை .பெரிய பெரிய பிசினஸ்களை எல்லாம் செய்து கொண்டிருக்கும் அரவிந்த்சாமி, 160 கோடிக்கு சொந்தக்காரர். பிசினஸில் போரடிக்கும் சமயத்தில் அவ்வப்போது வந்து நடிச்சிட்டுப் போகிறார்.

Also read: ஹீரோவை மீறி வில்லனாக ரகுவரன் சாதித்த 5 படங்கள்.. மறக்கமுடியாத மார்க் ஆண்டனி

Trending News