Actress doing Yoga: என்னதான் பேரு புகழ் வசதி என எல்லாம் இருந்தாலும் உடல் ஆரோக்கியம் ரொம்பவே முக்கியமானது. அதே மாதிரி ஆரோக்கியத்திற்காக நல்ல சாப்பாடுகளை சாப்பிட்டு வந்தாலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியமானது. அதற்கு மிக முக்கியமானது நடைப்பயிற்சி. அதே மாதிரி இன்னொரு விஷயம் மனசு நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் யோகா பண்ணுவது ரொம்பவே சிறந்தது.
இந்த யோகா மூலம் உடம்பை மட்டுமல்லாமல் மனசையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சீராக வைத்திருக்க முடியும். அந்த வகையில் இன்று சர்வதேச யோகாதினத்தை முன்னிட்டு பலரும் இந்த ஒரு நாளை கொண்டாடி வருகிறார்கள். அதில் பிரபல நடிகைகள் பலரும் அவர்களுடைய உடம்பை ஜம்முன்னு வைத்திருக்கும் யோகாவே செய்து சீராக உடலை வைத்திருக்கிறார்கள். அந்த நடிகைகள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

ஹன்சிகா: சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகாசனத்தின் முக்கியத்துவத்தை ரசிகர்களுக்கு உணர்த்தும் வகையில் நடிகை ஹன்சிகா புல்வெளியில் அமர்ந்து உடலை வளைத்து யோகாசனம் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். மேலும் உடற்பயிற்சி தினமும் 15 நிமிடங்கள் செய்தால் நிறைய மாற்றங்களை கொண்டு வரும் என ரசிகர்களையும் ஊக்கப்படுத்தி உள்ளார்.

டாப்ஸி: அழகு மட்டும் இருந்தால் போதாது உடலளவிலும் வலிமையாக இருக்க வேண்டும் என்று பல சாகசங்களை செய்யும் அளவிற்கு வித்தியாசமான உடற்பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று யோகா தினத்தை முன்னிட்டு ஒரு ஊக்குவித்தலை ஏற்படுத்தும் விதமாக யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

ராகுல் ப்ரீத் சிங்: மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக யோகா செய்யும் புகைப்படத்தை பிரபல நடிகை ராகுல் ப்ரீத் சிங் இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். அது மட்டுமில்லாமல் கணவருடன் இணைந்து யோகா செய்யும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

ஷில்பா ஷெட்டி: வித்தியாசமான முறையில் யோகா செய்து உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க ஷில்பா ஷெட்டி யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

பிரணிதா: அழகிலும் நடிப்பாலும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகை பிரணிதா அடிக்கடி யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உடம்பை கட்டுக்கோப்பாக வைக்கும் யோகாவை செய்து கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று யோக தினத்தை முன்னிட்டு யோகா செய்யும் போட்டோவை வெளியிட்டு உள்ளார்.