சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

விக்ரம் வெற்றியால் 750 கோடி முதலீடு.. அடுத்தடுத்து கமல் தயாரிப்பில் நடிக்கும் 5 ஹீரோக்கள்

Actor Kamal: கமல் இப்போது நடிகர் என்பதை காட்டிலும் தயாரிப்பில் தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இதற்கு காரணம் அவரது நடிப்பில் வெளியான விக்ரம் படத்தை கமல் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை அடைந்தது.

இதனால் கமல் இப்போது தயாரிப்பில் 750 கோடி முதலீடு செய்து இருக்கிறார். அதுவும் இப்போது டிரெண்டில் உள்ள ஐந்து ஹீரோக்களை வளைத்து போட்டு இருக்கிறார். அதன்படி தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகும் படத்தை கமல் தான் தயாரிக்கிறார். இந்த படம் கிட்டத்தட்ட 150 கோடி பட்ஜெட்டு என கூறப்படுகிறது.

Also Read : நட்பில் கர்ணனையே ஓவர் டேக் செய்த கமல்-ரஜினி.. டாப் ஹீரோக்களுக்கு வைத்த குட்டு

அதேபோல் அடுத்ததாக சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் கமல் தயாரிப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. இந்த படமும் சிம்பு படத்திற்கு போட்டியாக 150 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வருகிறார்கள். சமீபகாலமாக சிவகார்த்திகேயனின் படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து வரும் நிலையில் அவரது அதிக பட்ஜெட் படமாக இந்த படம் உருவாகி வருகிறது.

இதைத்தொடர்ந்து கமல் தயாரிப்பில் நடிப்பு அரக்கன் தனுஷ் நடிப்பது உறுதி ஆகிவிட்டது. கேப்டன் மில்லர் படத்தை முடித்துள்ள நிலையில் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் ஒரு படம் நடித்து வருகிறார். இந்நிலையில் ராஜ்கமல் நிறுவனத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் படம் 250 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது.

Also Read : கூப்பிட்டு அவமானப்படுத்திய கமல்.. இப்ப வழிய போய் வாய்ப்பு கேட்கும் ஆண்டவர்

அடுத்ததாக மாமன்னன் படத்தின் மூலம் மீண்டும் தனது நடிப்பு திறமையை பறைசாற்றில் வடிவேலு கதாநாயகனாக நிறைய படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். அந்த வகையில் கமல் தயாரிப்பில் உருவாகும் படத்திலும் வடிவேலு கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படம் மொத்தமாக 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறதாம்.

ராக்கெட்டரி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ள மாதவன் ராஜ்கமல் நிறுவனத்திற்கு ஒரு படம் பண்ணுகிறார். இந்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தையும் கமல் 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க இருக்கிறார். இவ்வாறு அடுத்தடுத்து படங்களை தயாரித்து உலகநாயகன் கல்லா கட்ட இருக்கிறார்.

Also Read : வடிவேலுக்கும், பிரம்மானந்தாக்கும் கமல் வைத்த செல்ல பெயர்.. வயிறு வலிக்க சிரித்த உலக நாயகன்

Trending News