வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

படத்துல வர காசு சும்மா, சீரியலில் அதிகமா சம்பாதிக்கும் 5 பிரபலங்கள்.. நம்பர் ஒன் இடத்தில் எதிர்நீச்சல் குணசேகரன்

சீரியலில் இருந்து சினிமாவுக்கு சென்ற காலமெல்லாம் மலையேறி, தற்போது சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் அனைவரும் சீரியலுக்கு என்ட்ரி கொடுக்கின்றனர். இதற்கு காரணம், சீரியலிலும் சினிமாவிற்கு நிகராக சம்பளங்களை கொடுப்பதால் ஜூனியர் நடிகர் நடிகைகளும் சீரியலில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதிலும் இப்போது அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் சீரியல் பிரபலங்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது.

கனிகா: டிஆர்பி-யில் மற்ற சேனல்களுக்கு எல்லாம் பயங்கர டஃப் கொடுக்கும் எதிர்நீச்சல் சீரியலில் நடிகை கனிகா, ஈஸ்வரி என்ற கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். எம்.பி.ஏ படித்தும் படிக்காத குணாவிடம் மாட்டிக்கொண்டு கூண்டில் அடைத்த கிளி போல் தனது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் ஈஸ்வரியாக கனிகா, தனது எதார்த்தமான நடிப்பை வெளிகாட்டுகிறார். இவர் தமிழில் பைவ் ஸ்டார் படம் மூலம் அறிமுகமாகி, அதன் பிறகு மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் முன்னணி நடிகையாகவும், துணை நடிகையாகவும் கலக்கியவர். இவர் ஒரு எபிசோடுக்கு மட்டும் 12 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்.

Also Read: குணசேகரன் ஆட்டத்தில் விழப்போகும் விரிசல்.. பரபரப்பான எதிர்நீச்சல்

பப்லு: தமிழ், தெலுங்கு சினிமாவில் நடிகர் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லனாகவும் 200 படங்களுக்கு மேல் நடித்து கலக்கிய பப்லு பிரித்திவிராஜ். தற்போது சன் டிவியில் கண்ணான கண்ணே என்ற சீரியலில் கௌதம் என்ற கேரக்டரில் கதாநாயகியின் தந்தையாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் நடிக்கும் மற்ற நடிகர்களை விட, இவர் தான்  அதிக சம்பளம் வாங்குகிறார். அதுவும் ஒரு எபிசோடுக்கு மட்டும் 20 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 57 வயதாகும் பப்லு அண்மையில் 23 வயது இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு சோசியல் மீடியாவை ரணகளம் செய்தார். இவர்களுக்கிடையே 34 வயது வித்தியாசம் இருப்பதால், இந்த விஷயத்தை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

சத்யபிரியா: தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் சிடுசிடுவென இருக்கும் குணசேகரனின் தாயாக சத்யபிரியா நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் நிறைய இடங்களில் நியாயதர்மத்திற்கு ஆதரவாக பேசாமல், மகனின் பிற்போக்கு சிந்தனைக்கு ஜால்ரா தட்டுவதால் சின்னத்திரை ரசிகர்கள் இவரை கழுவி கழுவி ஊற்றுகின்றனர். இருப்பினும் இவருடைய நடிப்பு பிடித்துப் போனால் தான் இப்படிப்பட்ட கமெண்ட் எல்லாம் வரும். இதை அவர் தனக்கு கிடைத்த பாராட்டாகவே பார்க்கிறார். இவர் நிறைய படங்களிலும் நடித்திருந்தாலும் சீரியலில் தற்போது சீனியர் நடிகையாக அதிக சம்பளம் வாங்கிக் கொண்டு கெத்து காட்டுகிறார். இவர் ஒரு எபிசோடுக்கு மட்டும் 20 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்.

Also Read: டிஆர்பி-யில் முதல் மூன்று இடத்தை பிடித்த சேனல்கள்.. விஜய் டிவி-கே தண்ணி காட்டிய பிரபல டிவி

மாரிமுத்து: சன் டிவியின் புத்தம் புது சீரியலான எதிர்நீச்சல் துவங்கப்பட்ட சில மாதங்களிலேயே டிஆர்பி-யில் டாப் லிஸ்டில் இருக்கிறது. அதிலும் இந்த சீரியலில் குணசேகரன் என்ற எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கும் மாரிமுத்துவிற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த அளவிற்கு சீரியலில் மிரட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் நிறைய படங்களை இயக்கியும், நடித்தும் இருந்தாலும் அதையெல்லாம் விட சீரியலில் அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். இவர் ஒரு எபிசோடுக்கு மட்டும் 35 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்.

அம்பிகா: 2021 ஆம் ஆண்டு துவங்கிய தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சன் டிவியின் அருவி சீரியலில் அம்பிகா, சரஸ்வதி என்ற கேரக்டரில் அட்டகாசமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் 80-களில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு டாப் ஹீரோயினாக வலம் வந்தவர். இப்போது சீரியல் என்ட்ரி கொடுத்திருக்கும் அம்பிகா, ‘படம் எல்லாம் சும்மா’ என்று சீரியலில் பலரும் ஆச்சரியப்படும் வகையில் அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். இவர் இந்த சீரியலில் நடிப்பதற்காகவே மாசத்திற்கு மட்டும் 12 லட்சத்தை சம்பளமாக பெறுகிறார்.

இவ்வாறு இந்த 5 பிரபலங்கள் தான் சினிமாவில் இருக்கும் நட்சத்திரங்கள் போலவே அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். இதில் சிலர் சீனியராக இருந்தாலும் வெள்ளித்திரை காட்டிலும் சின்னத்திரையே மேல் என்று தங்களது ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: முதல் மரியாதை ராதாவாக மாறிய கருப்பழகி.. சன் டிவி நடிகையின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்

Trending News