திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

5 ஹிட், 7 பிளாக்பஸ்டர் படங்கள் கொடுத்தும் அங்கீகாரம் கிடைக்காத ஒரே ஹீரோ.. இவருக்குள் இவ்வளவு திறமையா!

பாண்டியராஜ் இயக்கத்தில் 2010-இல் வம்சம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தின் கதாபாத்திரத்திற்காக விஜய் டிவியில் சிறந்த நடிகராக முதல் படத்திலே நாமினேட் செய்யப்பட்டவர் தான் அருள்நிதி.

அதற்குப் பின்னர் வந்த மௌனகுரு, தகராறு, டிமான்டி காலனி, ஆறாது சினம், பிருந்தாவனம், இரவுக்கு ஆயிரம் கண்கள், களத்தில் சந்திப்போம் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

2021 ஆம் ஆண்டு இந்த வருடத்தில் டைரி என்ற படத்தில் நடித்து வருகிறார். அருள்நிதி கிட்டத்தட்ட 15 படங்களில் நடித்து 5 ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் 7 பிளாக்பஸ்டர் சாதனை படைத்துள்ளார், இதைத் தாண்டி 2 விருதுகளையும் பெற்றுள்ளார் அருள்நிதி.

ஆனால் தற்போது வரை இவருக்கு கோலிவுட்டில் தரமான நடிகர் என்ற அங்கீகாரம் கிடைக்கவில்லையாம். கதை தேர்வு செய்வதில் மிகுந்தஆர்வம் கொண்ட அருள்நிதியை ரசிகர்கள் இன்று பாராட்டித்தான் வருகின்றனர்.

arul-nithi
arul-nithi

வருங்காலங்களில் இன்னும் பல படங்களில் நடித்து, கோலிவுட்டின் சிறந்த நடிகர் என்ற பட்டத்தை விரைவில் தொட்டு விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News