புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வசூலில் உச்சத்தை தொட்ட 5 ஹாலிவுட் படங்கள்.. 2000 கோடி வரை வசூலித்த ஒரே படம்

தமிழ் திரைப்படங்களை காட்டிலும் பேன் இந்திய திரைப்படங்கள், ஹாலிவுட் திரைப்படங்கள் உள்ளிட்டவை நம் திரையரங்குகளில் சமீபகாலமாக சக்கைபோடு போட்டு வருகிறது. அந்த படங்கள் நன்றாக இருந்தால் நம் இந்திய படங்களை மறக்கும் அளவிற்கு ரசிகர்கள் வசூலை வாரிக் கொடுப்பார்கள்.அப்படி இந்தியா முழுவதும் உள்ள பல திரையரங்குகளில் வெளியான 5 ஹாலிவுட் படங்களின் வசூல் வேட்டையை தற்போது பார்க்கலாம்.

தி ஜுங்கிள் புக் : 2016 ஆம் ஆண்டு இயக்குனர் ஜான் பெவரே இயக்கத்தில் வெளியான இப்படத்தை வால்ட் டிஸ்னி தயாரித்தது. உலகம் முழுதும் உள்ள பல மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது வெளியிடப்பட்டது. ஒரு சிறு பையன் பெற்றோர்களை இழந்து காட்டு விலங்குகளுடன் ஒன்று சேர வாழ்ந்து வருவது தான் இப்படத்தின் கதை. இங்கு திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இப்படம் 246 கோடி வரை வசூலை குவித்த நிலையில் மொத்தமாக 996 கோடி வரை உலகமெங்கும் வசூலானது.

Also Read : 15 ஹாலிவுட் ஹீரோக்களின் ஒட்டுரூபம் தான் இவர்.. 47 வருட அனுபவத்தில் பல சுவாரசியங்களை அவிழ்த்து விட்ட ராஜேஷ்

அவதார் 2: இந்தாண்டு டிசம்பரில் வெளியான இப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கினார். ஏற்கனவே இப்படத்தின் முதல் பாகம் 2009 ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வசூலை ஈட்டிய நிலையில் இப்படமும் இந்தியாவில் மட்டும் 249 கோடிவரை வசூலடைந்துள்ளது. சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை பார்க்கக்கூடிய படமாக இப்படத்தின் கதை அம்சங்கள்,கதாபாத்திரங்கள் உருவாக்கப் பெற்றிருக்கும்.

ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்: 2021 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை ஜான் வாட்ஸ் இயக்கியிருப்பார். ஏற்கனவே பல ஸ்பைடர்மேன் படங்கள் நாம் பார்த்த நிலையில், இத்திரைப்படத்தின் பிரத்யேகமான வி.எப்.எக்ஸ் காட்சி முறையை கையாண்டிருப்பர். அதற்காக ஆஸ்கார் விருதும் இப்படத்திற்கு கிடைத்த நிலையில், 1000 கோடிவரை உலகம் முழுதும் வசூலை எட்டியது. இந்தியாவில் மட்டும் 255 கோடிவரை வசூலடைந்தது.

Also Read : வியக்க வைக்கும் அவதார் 2 வசூல் நிலவரம்.. ஒரே வாரத்தில் இத்தனை கோடி வசூலா?

அவென்ஜர்ஸ் இன்பினிட்டி வார்: 2018 ஆம் மார்வெல் காமிக்சில் வரும் அமெரிக்க சூப்பர் ஹீரோக்களின் கதாபாத்திரங்களை வைத்து இப்படத்தை இருக்குநர்கள் அந்தோணி, ஜோ ரூஸ்செ இயக்கியிருப்பர். தோர், ஐயன் மேன் , ஹல்க் என நாம் சிறு வயதுகளில் ரசித்த அத்தனை கதாபத்திரங்களும் நம்மை மனதை மீண்டும் கொள்ளைக் கொண்டது. உலகம் முழுதும் வெளியான இப்படத்தின் வசூல் 2000 கோடியை எட்டிய நிலையில் இந்தியாவில் மட்டும் 290 கோடி வரை வசூலடைந்தது.

அவென்ஜர்ஸ் எண்டு கேம்: அவென்ஜர்ஸ் இன்னபினிட்டி வார் படத்தின் தொடர்கதையாக இப்படம் உருவாக்கப்பட்ட நிலையில், 2019 ஆம் ஆண்டு உலகம் முழுதும் வெளியானது. இப்படத்தில் ஐயன் மேனாக நடித்த டோனி ஸ்டார்க்கின் கதாபாத்திரம் முதன்மை கதாப்பாத்திரமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். உலகம் முழுதும் 2700 கோடிவரை வசூலை ஈட்டிய நிலையில், இந்தியாவில் மட்டும் 437 கோடிவரை வசூலை அள்ளியது.

Also Read : அவதார் டீமுடன் கூட்டணி போடும் சிவகார்த்திகேயன்.. இது என்னடா புது ஊருட்டா இருக்கு!

Trending News