ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

தொடர்ந்து 5 மணி நேரம் ஒளிபரப்பாகும் பிக்பாஸ்.. போட்டியாக வரும் சூப்பர் சிங்கர்

விஜய் டிவியில் கிட்டத்தட்ட 100 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரே வாரத்தில் இந்த சீசனில் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும். மேலும் 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி போட்டியாளராக தாமரைச்செல்வி இன்று எலிமினேட் செய்யப்பட உள்ளார்.

அத்துடன் மீதம் இருக்கும் ராஜு, நிரூப், பிரியங்கா, அமீர், பாவனி ஆகிய 5 பேரும் இறுதி வாரத்திற்கு முன்னேறி உள்ளனர். மேலும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் டாப் பைனல் லிஸ்ட் ஆக தேர்வாகி இருக்கும் இந்த ஐந்து போட்டியாளர்களில் யார் வெற்றியாளர் என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிந்துவிடும்.

மேலும் தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் தைப்பொங்கல் அன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் சிறப்பு தொகுப்பாக வரும் வெள்ளிக்கிழமை 14-ம் தேதி அன்று மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை தொடர்ந்து ஐந்து மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இதைத்தொடர்ந்து ஜனவரி 15-ம் தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை தொடர்ந்து மூன்று மணி நேரம் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

அதுமட்டுமின்றி பிக்பாஸ் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே வரும் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 16-ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியானது மாலை 6 மணிக்குத் துவங்கி 11.30 மணி வரை தொடர்ந்து ஐந்து மணி நேரத்திற்கு மேலாக ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன்5-ன் வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும். இந்த சீசன் மற்ற சீசன்களை காட்டிலும் கொஞ்சம் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் சென்றது என்பது ரசிகர்களின் கருத்து. அத்துடன் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் வெற்றியாளராக ராஜு அல்லது பிரியங்கா இருவரும் ஒருவராக இருக்கும் என்பது பலருடைய கணிப்பு.

ஆகவே பொங்கல் தினத்தை முன்னிட்டும், பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே மூலமும் விஜய் டிவி தனது டிஆர்பி ரேட்டிங்கை என்கிற விடுவதற்காக பக்கா பிளான் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்த உள்ளது.

அத்துடன் அடுத்த வாரம் முழுவதும் விஜய் டிவியில் நடைபெறும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

Trending News