செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பிக் பாஸ் வீட்டிற்குள் ஆட்டம் போடும் 5 சாத்தான்கள்.. கலீஜாக இறங்கி வேதம் ஓதும் கிழவி

Bigg Boss Season 7: ஆத்தாடி ஆத்தாடி இந்த மாதிரி ஒரு சீசனை இதுவரை எங்கேயுமே பார்த்ததில்லை என்று தலையில் அடித்து புலம்பும் மாதிரி பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இருக்கிறது. அதாவது ஆரம்பத்தில் ஹைலைட் ஆக இருந்து தந்திரமாக விளையாண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார் பிரதீப். அதன்பின் இவருக்கு வாரவாரம் மக்களிடமிருந்து வந்த கைதட்டளை பார்த்து பொறுக்க முடியாத மாயா ஒரு சூழ்ச்சியை போட்டு பிரதீப்பை வெளியே அனுப்பி விட்டார்.

அதுவும் சும்மா இல்ல ஒரு கேங்கை அமைத்து எந்த அளவிற்கு பெயரை கெடுக்க முடியுமோ அதை விட மோசமான ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார். ஆனால் அப்படி பிரதீப் வெளியே போயிருந்தாலும் தற்போது சோசியல் மீடியாவை தெறிக்க விடும் அளவிற்கு இவருடைய பெயர் தான் ஒய்யாரத்தில் இருக்கிறது.

இதை தட்டிக் கேட்கும் விதமாக அர்ச்சனா, விசித்ரா மற்றும் தினேஷ் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு இணையாக குரல் கொடுத்து வருகிறார்கள். ஆரம்பத்தில் என்னமோ மாயா, பூர்ணிமா தான் ஒன்று சேர்ந்து இருந்தார்கள். ஆனால் போகப் போக மாயா விரித்த வலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் அனைவரும் சரண்டர் ஆகி விட்டார்கள்.

Also read: பிரதீப் முதுகில் குத்திய நம்பிக்கை துரோகி.. மொத்த பிரச்சனைக்கும் காரணமான கருப்பு ஆடு

அதனாலயே ஒரு கேங் உருவாக்கிக் கொண்டு மாயா ரொம்பவே ஆட்டம் போடுகிறார். இவருக்கு ஒத்து ஊதும் விதமாக பூர்ணிமா, ஐசு, ஜோவிகா, நிக்சன் ஜிங் ஜாங் போட்டுக்கிட்டு இருக்கிறார்கள். அதிலும் பூர்ணிமா, கிழவி மாதிரி பேசும் ஒவ்வொரு விஷயமும் எரிச்சல் படுத்தும் விதமாகவும், கலிஜாவும் இருக்கிறது.

ஆக மொத்தத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களுக்கு நடுவே 5 சாத்தான்கள் இருந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. இதுல வேற எதுக்கு எடுத்தாலும் கமல் பெயரை பயன்படுத்தி கொள்கிறார்கள். அதற்கு காரணம் கமலுடைய சப்போர்ட் இவர்களுக்கு தான் இருக்கிறது என்ற நம்பிக்கையில்.

இவர்கள் நினைப்பது ஒன்றும் தவறும்  இல்லை. ஏன் என்றால் கமலும் அப்படித்தான் நடந்து கொள்கிறார். இவர்கள் என்ன பண்ணினாலும் கேள்வி கேட்பதில்லை, தண்டனை கொடுப்பதில்லை. அதனால்தான் இந்த 5 சாத்தான்களின் ஆட்டம் பெருசாக இருக்கிறது. இருந்தாலும் இவர்கள் முகத்தில் கறியை பூசாமல் விடமாட்டோம் என்று அர்ச்சனா விசித்திரா மற்றும் தினேஷ் தரமான செயல்களை செய்து வருகிறார்கள்.

Also read: தீர விசாரிப்பதே மெய்.. சோலியை முடிக்க வரும் பிரதீப், பின்வாங்கும் ஆண்டவர்

Trending News