திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

டிசம்பர் மாதத்தில் வெளிவரவுள்ள 5 முக்கியமான படங்கள்.. தடையை தாண்டுமா துருவ நட்சத்திரம்?

December Release Movies: இந்த வருடம் தமிழ் சினிமாவிற்கு நிறைய பீல் குட் படங்கள் கிடைத்தன. அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமான படம், லோ பட்ஜெட்டில் தரமான படம் என இந்த வருடம் முழுக்க சினிமா ரசிகர்கள் கொண்டாடுவதற்கு நிறைய நல்ல படங்கள் வெளிவந்து இருக்கின்றன. மேலும் இந்த வருடத்தின் கடைசி மாசமான டிசம்பரில் வெளிய ஆவதற்கு ஐந்து முக்கிய படங்கள் காத்திருக்கின்றன.

டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் ஐந்து படங்கள்

அனிமல்: ரன்பீர் கபூர், அணில் கபூர், பாபி தியோல், ராஷ்மிகா மந்தனா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்களோடு உருவாகி இருக்கும் படம் அனிமல், இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு டிசம்பர் ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆகிறது. மேலும் படத்தின் டிரைலர் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது. அனிமல் படத்தின் ஒளிபரப்பு நேரமும் அதிகம் என சொல்லப்படுகிறது. அனிமல் படம் வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது

அன்னபூரணி: நடிகை நயன்தாரா தேர்ந்தெடுக்கும் உமன் சென்ரிக் படங்கள் எப்போதுமே தோற்பதில்லை என்பதற்கு உதாரணமாக அமைந்திருக்கும் படம் அன்னபூரணி. படத்தின் டிரைலர் அந்த அளவுக்கு ரசிகர்களை ஈர்த்து இருக்கிறது. குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சமையல் கலை வல்லுனராக ஆக வேண்டும் என முயற்சி செய்வதுதான் இந்த படத்தின் கதை. இந்த படம் டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

Also Read:மன நிம்மதி இல்லாமல் தவிக்கும் கௌதம் மேனன்.. வேடிக்கை பார்க்கும் விக்ரம்

பார்க்கிங்: ஹரிஷ் கல்யாண், எம் எஸ் பாஸ்கர், இந்துஜா ஆகியோர் இணைந்து நடித்த படம் பார்க்கிங். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சில தினங்களுக்கு முன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை பார்த்துவிட்டு இது ஒரு சூப்பர் ஹிட் படமாக வரும் என மனதார பாராட்டி இருக்கிறார். இந்த படத்தை டிசம்பர் ஒன்றாம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறது பட குழு.

சலார்: பாகுபலி படத்திற்கு பிறகு தொடர் தோல்வியை சந்தித்து வரும் பிரபாஸ் மிகப் பெரிய அளவில் நம்பிக்கை வைத்திருப்பது சலார் படத்தின் மீதுதான். கே ஜி எஃப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்குகிறார். மலையாள உலகின் முன்னணி நடிகரான பிரித்விராஜ் சுகுமாரன் இந்த படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து நடிக்கிறார். சலார் படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

துருவ நட்சத்திரம்: இயக்குனர் கௌதம் மேனனின் கனவு படமான துருவ நட்சத்திரம் ஆறு வருடமாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன் ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய இந்த படம் சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டு இருக்கிறது.

Also Read:துருவ நட்சத்திரத்தை எப்படி ரிலீஸ் பண்றேன்னு நான் பார்க்கிறேன்.? கோர்ட்டை தாண்டி குடைச்சல் கொடுக்கும் வாரிசு நடிகர்

- Advertisement -

Trending News