பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியில் ஆபத்தான 5 பேர்.. பவுலர்களுக்கு எமன் என உளறிய இன்சமாம்

இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் என்றால் இரு நாட்டு ரசிகர்களும் நெருப்பாய் மாறி விடுவார்கள். பாகிஸ்தான் உடன் போட்டி என்றால் ரசிகர்கள் மட்டுமில்லை இந்திய வீரர்களும் வெறித்தனமாய் தயாராகி விடுவார்கள். அப்படி இதுவரை பாகிஸ்தான் உடன் பொளந்து கட்டிய 5 ஆபத்தான வீரர்கள்.

அஜய் ஜடேஜா: பார்ப்பதற்கு குழந்தை போல் சிரித்துக் கொண்டே இருப்பார். ஆனால் பாகிஸ்தானுடன் விளையாடும் பொழுது புன்னகையோடு பந்தாடி விடுவார். பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் வக்கார் யூனிஸ், இவரை தன் வாழ்நாளில் மறந்திருக்க மாட்டார். அந்த அளவிற்கு உலகக்கோப்பை போட்டியில் இவரை விரட்டி அடித்தார் ஜடேஜா.

ராகுல் டிராவிட்: இந்திய அணியின் விக்கெட்டுகள் சரிந்து விட்டால் மறுமுனையில் சுவர் போல் நின்று விடுவார். ஒரு நாள் போட்டிகளையும், டெஸ்ட் போட்டி போல் விளையாடி பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்துவிடுவார். பல சிக்கலான போட்டிகளில் பாகிஸ்தானுக்கு சவால் கொடுத்து இந்திய அணியை கரை சேர்த்திருக்கிறார் டிராவிட்

வீரேந்தர் சேவாக்: பல பவுலர்களை பாகிஸ்தான் அணியை விட்டு காணாமல் போக செய்திருக்கிறார். ராணா நவீத் உள் ஹசன், சையத் அப்ரிடி போன்றவர்கள் பந்து வீசினால் இவருக்கு அல்வா சாப்பிடுவது போல் இருக்கும். ஓவரில் ஆறு பந்துகளையும் விரட்டுவார்.

கௌதம் கம்பீர்: இயல்பாகவே மிக ஆக்ரோஷமாக விளையாடுபவர் இவர். ஐபிஎல் போட்டிகளில் உடன் விளையாடும் இந்திய அணி வீரர்களுக்கு எதிராகவே மிகக் கோபமாய் செயல்படுபவர், அதிலும் பாகிஸ்தான் அணி என்றால் கேட்கவே வேண்டாம். மைதானத்திலேயே வீரர்களிடையே மல்லுக்கட்டி பௌலர்களையும் பொளந்து விடுவார்.

மகேந்திர சிங் தோனி: ஆரம்ப காலகட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராகத்தான் இவர் முதல் சதத்தை அடித்தார். அது மட்டும் இன்றி ஆரம்பத்தில் இவர் யுக்தி வேறு மாதிரி இருக்கும். ஓவருக்கு இரண்டு சிக்ஸர்களை பறக்க விடுவார். பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் இன்சமாம், ஒருமுறை இவரை பவுலர்களை சாகடிக்கும் எமன் தோனி என்றும் அவரைப் பார்த்தால் பவுலர்கள் நடுங்குவார்கள் என்றும் பேட்டி கொடுத்துள்ளார்.

Trending News

- Advertisement -spot_img