பொதுவாக இந்தியாவில் விளையாட்டு போட்டிகளுக்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து சலுகைகளும் கொடுக்கப்படும். எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இந்திய அணியில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஏகப்பட்ட வசதிகள் செய்து தரப்படும்.
அப்படி விளையாடும் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் சம்பளம் பெறுவது மட்டுமல்லாது அவர்களுக்கு மத்திய அரசின் சில துறையில் தாமாகவே முன்வந்து அரசாங்க பதவிகளை கொடுப்பார்கள். அப்படி தற்போது அரசாங்க வேலை செய்துகொண்டு, இந்திய அணியில் விளையாடி கொண்டிருக்கும் வீரர்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
இப்படி அரசு பதவியில் இருக்கும் வீரர்களுக்கு வேலை பார்க்காவிட்டாலும் சம்பளம் கிடைத்துவிடுமாம். மொத்தத்தில் விளையாண்டு கொண்டே இருக்கும் போது இரட்டை சம்பளம் சலுகையாக பெற்றுள்ளனர்.
கே எல் ராகுல்: இவர் இந்திய அணியில் கடந்த 8 வருடங்களாக விளையாடிக் கொண்டிருக்கும் நட்சத்திர வீரர். தற்போது 28 வயதாகும் இவருக்கு இந்திய அணியில் விளையாடுவதற்கு முன்னரே ரிசர்வ் வங்கி துணை மேலாளர் பொறுப்பு கொடுத்திருந்தது. இப்போது இந்திய அணியில் மட்டுமல்லாது வங்கியில் இருந்தும் சம்பளம் இவருக்கு வந்துவிடும்.
ஜோகிந்தர் சர்மா: 2007ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் மிகவும் பிரபலமானவர். அந்த போட்டிக்கு பின்னர் இரண்டு வருடங்கள் இந்திய அணிக்காக விளையாடி வந்தார். அதன் பின்னர் இவருக்கு வாய்ப்பு குறையவே ஓய்வை அறிவித்து வெளியேறினார். பின்னர் இவருக்கு ஹரியானா மாநிலம் கௌரவ பட்டமாக காவல்துறையில் டி.எஸ்.பி பதவி கொடுத்தது. கடந்த சில வருடங்களாக இவர் வேலை செய்து வருகிறார்.
மகேந்திர சிங் தோனி: இந்திய அணியில் வெற்றிகரமான கேப்டன் மகேந்திர சிங் தோனி. மூன்று விதமான ஐசிசி கோப்பைகளையும் இந்திய அணிக்காக பெற்றுத் தந்தவர் தோனி. இவர் 2020ஆம் ஆண்டு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் முடிந்தவுடன் இந்திய ராணுவம் இவருக்கு கௌரவ பதவி கொடுத்தது. இன்றுவரை இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
யுஸ்வேந்திர சாஹல்: தற்போது இந்திய அணியில் விளையாடி கொண்டிருக்கும் ஸ்பின்னர் சாஹல். இவர் கடந்த 5 வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இவர் இந்திய அணியில் விளையாடுவதற்கு முன்பாகவே வருமான துறையில் வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சச்சின் டெண்டுல்கர்: இந்திய அணிக்காக 28 ஆண்டுகாலம் விளையாடியவர் டெண்டுல்கர். 2013ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இவர் இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். 2010-ஆம் ஆண்டு இவருக்கு இந்திய விமானப்படை கேப்டன் பதவி கொடுத்து கௌரவித்தது. இன்றுவரை அந்த பதவியில் நீடித்து வருகிறார்.