உலக சினிமாவிலேயே மாபெரும் விருது என்று கருதப்படுவது ஆஸ்கார் விருது தான். தங்க நிறத்தில் ஜொலிக்கும் அந்த விருதினை வாங்க வேண்டும் என உலகம் முழுதும் உள்ள பல மொழி நடிகர்கள் தங்களது நடிப்பு திறமையை வெறித்தனமாக மேம்படுத்துவார்கள். அப்படிபட்ட ஆஸ்க்கார் விருது குறித்த சுவாரசியமான தொகுப்பை பற்றி தற்போது பார்க்கலாம்.
ஜார்ஜ் ஸ்டான்லி என்பவர் தான் ஆஸ்கார் விருதில் காணப்படும் கையில் கோலூன்றி நிற்கும் ஆன் சிலையை வடிவமைத்தார். மேலும் சிட்ரிக் கிப்போன்ஸ் என்பவர் அந்த விருதினை முழுமையாக உருவாக்கினார். 1929 ஆம் ஆண்டு தான் முதன் முதலில் இந்த விருது திரைத் துறையினருக்கு கொடுக்கப்பட்டது. இந்த விருதின் கடைசி பகுதியில் ஐந்து சக்கரங்கள் இடம்பெற்றிருக்கும். அவை நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள், டெக்னீஷியன்கள் உள்ளிட்டவற்றை குறிக்கும்.
ஆஸ்கார் விருதின் உயரத்தின் அளவு 13 அரை உயரமாகவும், அதன் சுற்றளவு 5 அரை அகலமாகவும்,அதன் மொத்த எடை 4 கிலோவாகும். ஆஸ்கார் விருதை பார்ப்போருக்கு அது தங்கத்தால் ஆனது என்று தான் நம்முள் பலரும் நினைத்திருப்போம். ஆனால் உண்மையில் ஆஸ்கார் விருது முழுக்க முழுக்க வெண்கலத்தால் உருவாக்கப்பட்டது. சிகாகோ மாகாணத்தில் உள்ள ஆர்.எஸ்.ஓவென்ஸ் என்ற இடத்தில் தான் 100 க்கும் மேற்பட்ட ஆஸ்கார் விருதுகள் வருடம் வருடம் தயாரிக்கப்படுகிறது.
முதலில் வெண்கலத்தால் செய்த விருதை பித்தளை, நிக்கல், சில்வர், 24 கேரட் தங்கம் உள்ளிட்ட நான்கு உலோக ரசாயனம் கலவையில் மூழ்கடிக்கப்பட்டு இந்த ஆஸ்கார் விருது முழுமையாக உருவாக்கப்படுகிறது. ஆஸ்கார் விருது முழுமையாக தயாரிக்கப்பட்டவுடன் அதன் அடிப்பகுதியில், எந்த ஆண்டில் தயாரிக்கப்பட்டதோ அந்த ஆண்டின் பெயர் மற்றும் யாருக்கு அந்த விருது கிடைக்கபோகிறதோ அவர்களின் பெயரும் தங்க நிறத்தால் பொறிக்கப்படும்.
Also Read : ஆஸ்கார் நாயகனுக்கு சரியான நேரத்தில் உதவிய தனுஷ்.. எல்லா படத்திலும் இவருக்கு இது வேலையா போச்சு!
ஆஸ்கார் விருதுக்காக உலகம் முழுக்க உள்ள பல படங்கள்,நடிகர்கள்,இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், ஒரு துறைக்கு குறைந்தது 5 நபர்களையாவது நாமினேட் செய்வார்கள். அதில் ஒருவருக்கு மட்டுமே விருது கொடுக்கப்படுவதையடுத்து மீதம் நாமினேட் செய்யப்பட்டவர்களுக்கு இந்திய மதிப்பின்படி 32 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்.
இதுவரை இந்தியாவில் மட்டுமே பானு அதையா, சத்யஜித் ராய், ரசூல் பூக்குட்டி, ஏ.ஆர் ரஹ்மான், கல்சார் உள்ளிட்ட 5 நபர்கள் ஆஸ்கார் விருதினை வாங்கியுள்ளனர். இவ்வளவு பெருமை மிக்க ஆஸ்க்கார் விருது உலகிலேயே வால்ட் டிசனியிடம் தான் அதிகமாக கிட்டத்தட்ட 26 விருதுகள் உள்ளதாம்.நம் இந்தியாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானிடம் தான் அதிகபட்சமாக 2 ஆஸ்கார் விருதுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read : ஏ ஆர் ரஹ்மானுக்காக 20 வருடம் காத்திருந்த இயக்குனர்.. ஆஸ்கார் கிடைத்த சந்தோஷத்தில் இருக்கிறாராம்