செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

நடிப்புக்கு முன் நாகேஷ் கஷ்டப்பட்டு செய்த 5 வேலைகள்.. பின் எம்ஜிஆர், சிவாஜிக்கு தண்ணி காட்டிய கலைஞன்

சுமார் 1000 படங்களுக்கு மேல் நடித்து கலக்கியவர் தான் நாகேஷ். இவருடைய டான்ஸ் ஸ்டைல் மற்றும் காமெடிக்கு ஈடு இணையே கிடையாது. ஆனால் நாகேஷ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுப்பதற்கு முன்பு 5 கஷ்டமான வேலைகளை பார்த்திருக்கிறார். அதன் பிறகு தான் அவருக்கு சினிமா வாய்ப்பே கிடைத்திருக்கிறது.

முதலில் நாகேஷ் தன்னுடைய குடும்ப சூழ்நிலையின் காரணமாக சிறு வயதிலேயே ஊறுகாய் கம்பெனியில் உதவியாளராக வேலை பார்த்திருக்கிறார். அங்கு காலை முதல் மாலை வரை பம்பரமாக வேலை செய்ததை பார்த்த ஒருவர், அவருக்கு மில்லில் வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார். இப்போது எப்படி அரசு வேலையை மதிப்பும் மரியாதையுடன் பார்க்கிறார்களோ! அந்த காலத்தில் மில்லு வேலை என்றால் அவ்வளவு கௌரவம்.

Also Read: நடிப்பை தாண்டி தியேட்டர் கட்டி லாபம் சம்பாதிக்கும் 4 பிரபலங்கள்.. பெரிய மால் ஆகிய சிவாஜியின் தியேட்டர்

ஆனால் அந்த வேலை பார்ப்பது சுலபமான விஷயமல்ல. இயந்திரங்களின் சத்தம் மற்றும் ஆபத்தான இடத்தில் கவனமாக பணி புரியவில்லை என்றால் கை, கால் போன்றவையும் மெஷினுக்குள் சென்று விடும்.  நாகேஷ் அதிலும் தன்னுடைய சுறுசுறுப்பை காட்டி அடுத்ததாக அவருக்கு, ரயில்வேவில் உதவியாளராக பணி புரிவதற்கு வேலை கிடைத்தது. அங்கு இரவு பகல் என படாத பாடுபட்ட நாகேஷ் பிறகு ஹோட்டலில் வேலை பார்த்தார்.

ஹோட்டலுக்கு சாப்பிட வந்தவர் நாகேஷின் சூட்டிக்கையை பார்த்து இவர் நாடகத்தில் நடிப்பதற்கு கச்சிதமானவர் என்று நாடக கம்பெனியில் சேர்த்து விட்டார். அங்கு தன்னுடைய நடிப்பால் பலரையும் அசர வைத்தார். சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது பற்று கொண்ட நாகேஷ் அந்த நாடக கம்பெனியில் இருப்பது அவருக்கு கஷ்டமாக இருந்தாலும், அது பிடித்தமான வேலை என்பதால் நிறைய நாடகங்களில் நடித்து வந்தார்.

Also Read: நாகேஷ் நடித்து நங்கூரமாய் மனதில் நின்ற 5 கதாபாத்திரம்.. மறக்க முடியாத தருமி தாசன்

இவருடைய நாடகத்தை பார்த்து எம்ஜிஆர் ரசித்து பாராட்டினார். அதுமட்டுமல்ல ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படப்பிடிப்பின் போது ஒரு காட்சியை நாகேஷ்சை நடித்துக் காட்டும் படி இயக்குனர் ஸ்ரீதர் சொல்ல, உடனே தயக்கமில்லாமல் நடித்துக் காட்டினார். பின் ‘இவர் பண்றது ஒரு மாதிரி ஸ்பீடா சுறுசுறுப்பாக நல்லா இருக்குது’ என்று அந்தப் படத்தில் கம்பவுண்டர் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.

அதில் காமெடி நடிகராக நடித்த நாகேஷ் தொடர்ந்து பல கதாபாத்திரங்களில் சினிமாவில் நடிக்க தொடங்கினார். பிறகு கதாநாயகனாகவும் நகைச்சுவை நடிகராகவும் அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் சிவாஜி, எம்ஜிஆர் படங்களில் இவர் நடிக்கும் போது அவர்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு நடிப்பில் பின்னி பெடலெடுத்தது மட்டுமின்றி, இவருக்காகவே அவர்கள் மெனக்கெட்டு நடிக்க வேண்டியதாகவும் இருந்தது. அதன் பின் படிப்படியாக நடித்து மிகப்பெரிய நகைச்சுவை நடிகர் ஆனார் நாகேஷ்.

Also Read: பாலச்சந்தர், நாகேஷுக்கு ஏற்பட்ட சண்டை.. அவரால் கொலைவெறியில் சுற்றிய கமல்

Trending News