சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

5 முன்னணி நடிகர்களுக்கு இருக்கும் பிரச்சனை.. இதுதான் அஜித்துக்கு மிகப்பெரிய பிளஸ் அண்ட் மைனஸ்

5 Leading Actors Have Problems: என்ன தான் நடிகர்கள் கோடி கோடியாக சம்பாதித்து பேரும் புகழையும் பெற்றாலும், அவர்களும் நிம்மதி இல்லாமல் அவஸ்தைப்படும் அளவிற்கு பிரச்சனை இருக்க தான் செய்கிறது. அந்த வகையில் ஐந்து முன்னணி நடிகர்களுக்கு மிகப் பெரிய பிரச்சனை இருக்கிறது. அது எந்தெந்த நடிகர்கள் என்ன பிரச்சனை என்று தற்போது பார்க்கலாம்.

விஜய் சேதுபதி: இவர் ஆரம்பத்தில் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் போகப்போக ஹீரோவாக வலம் வந்துவிட்டார். அதன்பின் கிடைத்த பேரும் புகழும் வச்சு கிடைக்கிற கதாபாத்திரங்கள் அனைத்தையும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதிலும் பணம் அதிகமாக கிடைக்கிறது என்றால் வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்க துணிந்து விட்டார். அதனாலேயே தொடர்ந்து பல படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்தார். ஆனால் அப்படிப்பட்ட இவருக்கு தற்போது ஹீரோவாக நடிப்பதற்கு முடியாமல் ஒவ்வொரு பிரச்சினையாய் சந்தித்து வருகிறார்.

சிம்பு: இவருக்கு இருக்கும் ரசிகர்களை வைத்து அடுத்தடுத்து படங்களில் நடித்திருந்தால் பெரிய ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்று இருக்கலாம். ஆனால் இவருக்கு கிடைக்கும் வாய்ப்பின் மூலம் நிறைய தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் ஆக பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களை அலைக்கழிக்க விடுகிறார். அதனாலேயே இவருடைய கேரியர் கொஞ்சம் டேமேஜ் ஆகிவிட்டது. ஆக மொத்தத்தில் தற்போது இவரிடம் கணக்கில் காட்டப்படாத கருப்பு பணம் தான் அதிகமாக இருக்கிறது.

Also read: சிம்புவை விட 10 மடங்கு அதிகமா ஆடிய 5 ஹீரோஸ்.. அப்பவே தயாரிப்பாளர்களை காலி செய்த நவரச நாயகன்

சிவகார்த்திகேயன்: சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் வந்திருந்தாலும் இவருக்கான அந்தஸ்தை பெற்று முன்னணி ஹீரோ என்ற இடத்தை பெற்று விட்டார். அதனால் ரசிகர்கள் மனதில் நம்ம வீட்டுப் பிள்ளையாக நீங்காத இடத்தை பிடித்தார். இவருக்கு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆதரவு கொடுத்து வந்தார்கள். அப்படிப்பட்ட இவர் சமீபத்தில் பல பெண்களிடம் சில்மிஷம் செய்ததாக இவருடைய பெயர் அடிபட்டுவிட்டது.

அஜித்: தான் உண்டு தன் வேலை உண்டு என்பதற்கு ஏற்ப நடிப்பதில் மட்டுமே இவருடைய முழு கவனத்தையும் செலுத்தி ரசிகர்களுக்காக ஒரு படத்தை கொடுத்து விடுகிறார். அதோடு இவருடைய கடமை முடிந்து விட்டதாக சினிமாவை விட்டு எட்டடி தூரத்துக்கு விலகியே இருக்கிறார். இது ஒரு விதத்தில் இவருக்கு பிளஸ் ஆக அமைந்திருந்தாலும், சில சமயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு மைனஸ் ஆகவும் முடிந்து விடுகிறது. அந்த வகையில் அஜித் என்றால் சினிமாவை மதிக்காத ஒரு நடிகர் என்ற பெயரை வாங்கிக் கொண்டார்.

விஜய்: இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்று வசூல் மன்னனாகவும், ஆட்டநாயகனாகவும் வலம் வருகிறார். அதே மாதிரி அரசியலிலும் ஜெயித்து விட வேண்டும் என்று பல வழிகளில் முயற்சி எடுத்து வருகிறார். அப்படிப்பட்ட இவருடைய அரசியலுக்கு பல வழிகளில் இருந்து இவருக்கு பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் முறியடித்து எப்படியாவது அரசியலில் ஜெயித்து விட வேண்டும் என்பதற்காக படாதபாடு பட்டு வருகிறார்.

Also read: விஜய்யை மிஞ்ச ரஜினி நடிக்கப் போகும் 5 பிரம்மாண்ட இயக்குனர்கள்.. பட்ஜெட் 1500 கோடி, அப்படின்னா வசூல்?

Trending News