செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விஜய் கொடுத்த தரமான 5 லவ் ஹிட்ஸ்.. காதலுக்காக எதுவும் செய்யலாம் என இளசுகளை தூண்டிய படங்கள்

நடிகர் விஜய் தற்போது 120 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவிற்கு மாஸ் ஹீரோவாக தென்னிந்தியாவின் வலம் வருகிறார். ஆரம்பகாலத்தில் இவரது திரைப்படங்களில் ஆக்ஷன் காட்சிகளை விட காதல் காட்சிகள், காமெடி காட்சிகளை அதிகம் நம்மால் பார்க்க முடியும்.

அப்படிப்பட்ட திரைப்படங்கள் தான் நடிகர் விஜய்யை இன்று தளபதியாக உருவாக்கியுள்ளது. அப்படி நடிகர் விஜய் காதலுக்காக எதையும் செய்யலாம் என்ற வகையில் பல காதல் திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் விஜயின் நடிப்பில் வெளியான 5 காதல் திரைப்படங்களைப் பற்றி தற்போது பார்க்கலாம்.

காதலுக்கு மரியாதை : மலையாள இயக்குனர் பாசில் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு நடிகர் விஜய், ஷாலினி உள்ளிட்டோர் காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் நடித்திருந்தனர். வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் காதலிக்கும் நிலையில் இருவரின் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக தங்களது காதலையே தியாகம் செய்யும் அளவிற்கு இப்படத்தின் கதை நகரும். இத்திரைப்படம் விஜயின் கேரியரை தூக்கிவிட்ட திரைப்படமாகும்

Also Read: விஜய்யை பார்த்து பயந்த போனி கபூர்.. ஒரே வார்த்தையால் தைரியம் கொடுத்த அஜித்

ஒன்ஸ்மோர் : விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ். ஏ சந்திரசேகர் இயக்கிய இத்திரைப்படத்தில் நடிகர் விஜய், சிம்ரன், சிவாஜி உள்ளிட்ட பலர் நடித்திருப்பர். படம் முழுவதும் சுட்டித்தனமாக வரும் விஜய், சிவாஜி கணேசனின் 30 வருட காதலை சேர்த்து வைக்க முயற்சி செய்வார். இதனால் தன்னைப் பழி வாங்க வரும் தனது காதலியான சிம்ரனின் மனதையே மாற்றும் அளவிற்கு இத்திரைப்படத்தில் விஜய் நடித்து அசத்தியிருப்பார்.

சச்சின் : 2005-ஆம் ஆண்டு இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் நடிகர் விஜய், ஜெனிலியா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சச்சின் திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படமாக ஹிட்டானது. கல்லூரி காலத்தில் ஏற்படும் தனது காதலை,தன் காதலியான ஜெனிலியாவிடம் நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக பல தொந்தரவுகளையும், குறும்புகளையும் செய்து காமெடி கலந்த காதல் கதையாக இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் அசத்தலாக நடித்திருப்பார்.

Also Read: 100 கோடி வசூலை பார்த்தவுடனே விஜய்யுடன் கூட்டணியா? யாரும் எதிர்பார்க்காத மெகா காம்போ

திருமலை : நடிகர் விஜய், ஜோதிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திருமலை திரைப்படத்தில் சாதாரண மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்யும் ஏழை இளைஞராக தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் விஜய். பணக்கார பெண்ணான ஜோதிகாவை காதலிக்கும் விஜய் தனது காதலுக்காக என்னவெல்லாம் செய்கிறார் என்பதே இத்திரைப்படத்தின் கதையாக அமைந்தது. திருமலை திரைப்படம் விஜய்யின் கேரியரில் காதல், ஆக்ஷன் என முக்கியமான திரைப்படமாகும் .

காவலன் : நடிகர் விஜய் முற்றிலுமாக காதல் கதையில் நடித்த கடைசி திரைப்படம் என்றால் காவலன் திரைப்படம் ஆகும். 2011 ஆம் ஆண்டு விஜய், அசின் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் ஹிந்தியில் வெளியான பாடிகார்ட் திரைப்படத்தின் ரீமேக்காகும்.முகம் பார்க்காமல் கைப்பேசியில் பேசி வரும் தனது காதலியை கண்மூடித்தனமாக காதலிக்கும் விஜயின் நடிப்பு இத்திரைப்படத்தில் அசத்தலான வெற்றியை தேடிக் கொடுத்தது.

Also Read: அதிக எதிர்பார்ப்புடன் வர இருக்கும் 6 படங்கள்.. விஜய், அஜித்தை ஓரம்கட்ட வரும் கமல்

Trending News