Kalaingar 100th Programme: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது ஆண்டு விழாவை இன்று கொண்டாட தமிழ் திரையுலகினர் கடலென திரண்டு உள்ளனர். இந்த விழாவில் பங்கேற்க தமிழக அனைத்து கட்சி தலைவர்களும், திரையுல பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் மூத்த நடிகர்களாக இருக்கும் ரஜினி மற்றும் கமலுக்கு நேரில் சென்று அழைத்து இருக்கிறார்கள்.
மேலும் இந்த நிகழ்ச்சியை மிகப் பிரம்மாண்ட முறையில் நடத்துவதற்காக பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதற்காக கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் 22500 பேரு அமரும் இருக்கைகள் தயாராகி வருகின்றன. இந்த நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு நடைபெற இருக்கிறது. அத்துடன் மொத்த நிகழ்ச்சியின் நேரம் 6 மணி நேரம்.
அதில் 40 நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு திட்டமிட்டப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலைஞரைப் பற்றி அனைத்து விஷயங்களும் காட்சியாக கொடுத்து அர்ப்பணிப்பு செய்யப் போகிறார்கள். மேலும் விழாவிற்கு பொதுமக்களுக்கு அனுமதி இலவசம். ஆனாலும் முதல்வர், திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வதால் பாதுகாப்பு நலன் கருதி சினிமா சங்கங்கள் மூலம் டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
Also read: எம்ஜிஆர் கருணாநிதி சந்தித்த ஒரே மேடை.. 60 வருடத்திற்கு முன்பு நடந்த சம்பவத்தின் சாட்சி
இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் 5 முக்கிய விஷயங்கள் நடைபெற இருக்கிறது. இதில் இயக்குனர் விஜய், கலைஞரின் ஆவணம் படம் ஒன்றை தயார் செய்திருக்கிறார். அடுத்ததாக கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு சின்ன சீரியல் மாதிரி எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் கலைஞராக கே எஸ் ரவிக்குமார் நடிக்கிறார், அண்ணாவாக ரமேஷ் கண்ணா மற்றும் பெரியாராக வேலு பிரபாகரன் நடிக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து தனுஷ் கலைஞரைப் பற்றி அவரை லிரிக்ஸ் எழுதி பாடுகிறார். அத்துடன் கவிதையும் எழுதி இருக்கிறார். மேலும் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியை விட பிரம்மாண்டமாக சென்னையில் வரப்போகுது. குவின்ஸ் லேண்ட் பக்கத்தில் 150 சதுர அடியில் வரப்போகிறது. இதை CM தமிழ் சினிமாவிற்கு பரிசாக கொடுக்கப் போகிறார்.
இதையெல்லாம் தாண்டி இந்த நிகழ்ச்சியில் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து இருப்பது அஜித், விஜய் கலந்து கொள்வார்களா என்று தான். ஏனென்றால் இவர்கள் இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி பல வருடங்கள் ஆனதால் இதை அனைவரும் பார்ப்பதற்கு ஆவலாக எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
Also read: கருணாநிதி கிட்டயே வேலையை காட்டிய எம்ஆர் ராதா.. சும்மா விடுவாரா?