வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

2023-ல் ஓடிடி-யில் அதிகம் பார்க்கப்பட்ட 5 படங்கள்.. 2.5 கோடி பார்வையாளர்களைக் கவர்ந்த அஜித்

5 Most Viewed Movies on OTT in 2023: தியேட்டர்களைப் போலவே ஓடிடியிலும் டாப் நடிகர்களின் படங்களை ரிலீஸ் செய்து கல்லா கட்டுகின்றனர். அதிலும் 2023 ஆம் ஆண்டு நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட ஐந்து படங்களின் லிஸ்ட் வெளியாகி இணையத்தில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

இதில் அஜித்தின் படம் மட்டும் 2.5 கோடி பார்வையாளர்களை பெற்று மாஸ் காட்டி உள்ளது. இதில் 5-வது இடத்தில் திரிஷாவின் ‘ராங்கி’ திரைப்படம் இருக்கிறது. எப்போதுமே ஹோம்லி லுக்கில் பார்த்த த்ரிஷாவை இதில் ராங்கியாக பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக 4-வது இடத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘டிஎஸ்பி’ படம் உள்ளது.

இதைத்தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘கட்டா குஸ்தி’ படம் தான் ரசிகர்களிடம் அதிக பார்வையாளர்களை பெற்று 3-வது இடத்தில் உள்ளது. இந்த படத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் தம்பதியர்கள் எப்படி எல்லாம் தங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய நினைக்கிறார்கள், கணவன் மனைவியாக இருப்பவர்களிடம் எந்த எதிர்பார்ப்பையும் வைக்க கூடாது என்ற விஷயத்தை இந்த படத்தில் ஆணித்தரமாக சொல்லினர்.

Also Read: எந்த கொடியும் இல்ல ஸ்டிக்கரும் இல்ல.. கோடியில் வாரி வழங்கிய அஜித், பார்த்து கத்துக்கங்க தளபதி

2023-ல் ஓடிடி-யில் அதிக பார்வையாளர்களைப் பெற்ற 5 திரைப்படம்

தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியான வாத்தி திரைப்படம் ஓடிடி தளத்தில் அதிக பார்வையாளர்களைப் பெற்ற படங்களில் 2-வது இடத்தில் உள்ளது. இதில் தனுஷ் தனக்கு கச்சிதமாக பொருந்திய அரசு பள்ளி ஆசிரியராக சிறப்பாக நடித்திருந்தார். இதனால் ஓடிடி-யில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதேபோல் அல்டிமேட் சூப்பர் ஸ்டார் அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த வருடம் தியேட்டரில் வெளியான துணிவு திரைப்படம், அதன் பின் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. ஒட்டுமொத்தமாக இந்த படத்தை ஓடிடி-யில் 2.5 பார்வையாளர்கள் கண்டு களித்துள்ளனர்.

இதனால் 2023 ஆம் ஆண்டு அதிகம் பார்க்கப்பட்ட ஓடிடி திரைப்படம் அஜித்தின் துணிவு தான் என்ற சாதனையைப் படைத்திருக்கிறது. பக்கா ஆக்ஷன் திரைப்படமாக வெளியான இந்த படம் இளசுகளால் அதிகம் பார்க்கப்பட்ட படம் என்ற விஷயம் இப்போது வைரலாக பரவுகிறது. இதை வைத்து தல ரசிகர்களும் சோசியல் மீடியாவில் கெத்து காட்டுகின்றனர்.

Also Read: என்னது அஜித் கூட சேர்ந்து போட்டோ எடுத்தா வேலை போயிடுமா.? பேக் பண்ணி அனுப்பிய சம்பவம்

Trending News