ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பெண்கள் மனதை உருக வைத்த கமலின் 5 படங்கள்.. மொத்த தியேட்டரையும் கண்ணீரில் மிதக்க செய்த உலக நாயகன்

Kamal Best Acted  Movies: கமல் நடித்த எத்தனையோ படங்கள் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்து சாதனை புரிந்திருக்கிறது. அதில் சில படங்கள் பெண்களின் மனதை உருக வைக்கும் அளவிற்கு காட்சிகள் அமைந்திருக்கும். அப்படிப்பட்ட படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

வாழ்வே மாயம்: ஆர் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வாழ்வே மாயம் திரைப்படம் வெளிவந்து. இப்படத்தில் ஸ்ரீதேவியை உருகி உருகி காதலித்து வருவார் கமல். அதன் பின் இவருக்கு கேன்சர் இருப்பது தெரிந்ததால், ஸ்ரீதேவியை விட்டு விலகி விடுவார். அதே நேரத்தில் ஸ்ரீதேவியை வெறுக்கும் அளவிற்கு கெட்டவராக நடிப்பார். அதற்கு காரணம் ஸ்ரீதேவி தன்னை மறந்து வேறு ஒருவரை திருமணம் செய்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக.

மூன்றாம் பிறை: பாலு மகேந்திரா இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு மூன்றாம் பிறை திரைப்படம் வெளிவந்தது. இதில் ஸ்ரீதேவிக்கு ஏற்பட்ட ஒரு விபத்தினால் பழைய ஞாபகங்கள் மறந்து விடும். அப்பொழுது கமல் இவருக்கு அடைக்கலம் கொடுத்து பொக்கிஷமாக பாதுகாத்து வருவார். கடைசியில் ஸ்ரீதேவிக்கு ஞாபகம் வந்ததால் அவருடைய குடும்பத்துடன் போய்விடுவார். அப்பொழுது கமல், ஸ்ரீதேவி மறந்த விஷயங்களை ஞாபகப்படுத்தும் வகையில் பிரமாதமான நடிப்பை கொடுத்து பார்ப்பவர்கள் கண்ணில் கண்ணீர் வர வைக்கும் அளவிற்கு மிரட்டி இருப்பார்.

Also read: ரெட் ஜெயண்ட்டை புத்திசாலித்தனமாக பயன்படுத்தும் கமல், மணிரத்தினம்.. உதயநிதி தலையில் அரைத்த மிளகாய்

மகாநதி: சந்தன பாரதி இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு மகாநதி திரைப்படம் வெளிவந்தது. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று ஒரு பழமொழி உண்டு அது இப்படத்திற்கு நல்லாவே பொருந்தும். அதாவது தன் மனைவி இல்லாமல் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வந்த கமலுக்கு திடீர் வந்த ஆசையால் மொத்தத்தையும் இழந்து தவிக்கும் கதையாக இப்படம் வெளிவந்தது. முக்கியமாக கடைசியா காட்சியில் மகளை மீட்டு அப்பா மகளின் உணர்வை காட்டும் விதம் பெண்களை ரொம்பவே ஈர்த்துவிட்டது என்றே சொல்லலாம்.

ஒரு கைதியின் டைரி: பாரதிராஜா இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு ஒரு கைதியின் டைரி திரைப்படம் வெளிவந்தது. இப்படம் க்ரைம் தில்லர் படமாக சண்டைக் காட்சிகளுடன் ரணகளத்தை ஏற்படுத்தியது. அதாவது இப்படத்தில் கதையானது தன் மனைவியின் இறப்பிற்கு காரணமானவர்களை பழிவாங்க துடிக்கும் கணவர். இவரை தடுக்கும் போலீஸ் அதிகாரியாக மகன் இவர்களுக்கு நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து கதை நகரும்.

பாபநாசம்: ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு பாபநாசம் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் கதையானது தன் மகளின் மானத்திற்காக மனைவி செய்த கொலையை மறைக்கும் விதமாக கமல் படாத பாடு பட்டு ஒவ்வொரு விஷயத்தையும் செய்திருப்பார். இடையில் போலீஸ் துன்புறுத்தும் போது ரொம்பவே பரிதாபமாகவும் எதார்த்தமான அப்பாவின் கஷ்டங்களையும் எடுத்துச் சொல்லி பார்ப்பவர்களின் கைத்தட்டலை பெற்றிருக்கிறது.

Also read: சிம்பு இடத்தை அசால்டாக தட்டி தூக்கிய வாரிசு நடிகர்.. மணிரத்தினம்-கமல் கூட்டணியில் என்ன ரோல் தெரியுமா?

Trending News