வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

ஜாஃபர் சாதிக் நடிப்பில் தெறிக்கவிட்ட 5 படங்கள்.. சைஸ் சிறுசானாலும் மவுசு பெருசு, ராவண ரவுடி

Jaffer Sadiq: பன்முகத் திறமை கொண்ட ஜாஃபர் சதிக் சிறந்த நடன இயக்குனர் ஆவார். தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களிலும் தற்பொழுது தன் திறமையை நடிப்பில் வெளிப்படுத்தி வருகிறார். இவரின் அசத்தலான நடிப்பை வெளிக்காட்டிய 5 படங்களை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.

ஜான் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்ற கூற்றுக்கு எடுத்துக்காட்டாய் இவரின் நடிப்பு தற்போது தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. டான்ஸ் மட்டுமே தன் உலகமாய் பார்த்து வந்த இவர், வெந்து தணிந்த காடு என்னும் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் இடம் பெற்றிருப்பார். அதைத்தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் உருவான விக்ரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார்.

Also Read: நம்ம ஜாஃபர் சாதிக்கின் காதலியை பார்த்து பொறாமைப்படும் ஹீரோயின்கள்.. தெறிக்க விடும் புகைப்படம்

இப்படத்தில் தெறிக்கவிடும் வில்லன் கதாபாத்திரம் ஏற்று தன் சிறப்பான நடிப்பினால், படத்திற்கு கூடுதல் வெற்றியை சேர்த்திருப்பார். மேலும் சைஸ் சிறுதானாலும் மவுசு பெருசு என்பதற்காக இவரின் வில்லத்தனம் விக்ரம் படத்தில் பெரிதாய் பார்க்கப்பட்டது. அப்படத்தின் வெற்றியை கொண்டு தன் அடுத்த கட்ட படங்களில் பிசியாக இருந்து வருகிறார் ஜாஃபர் சதிக்.

அதைத்தொடர்ந்து தெலுங்கு கிரைம் மற்றும் திரில்லர் வெப் சீரியஸான சைத்தானிலும் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடத்தி வருகிறார். தற்போது ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு துணை கதாபாத்திரம் ஏற்று தன் நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார் ராவண ரவுடி.

Also Read: திரும்பவும் தலைக்கனம் பிடித்த தயாரிப்பாளர் உடன் இணையும் தளபதி.. எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டீங்க

மேலும் குறுகிய காலத்தில் இவரின் இத்தகைய வளர்ச்சி இவர் நடிப்பின் மீது மேற்கொண்ட ஆர்வத்தை வெளிப்படுத்தும் விதமாய் இருந்து வருகிறது. மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய லியோ படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் ஷாருக்கான், விஜய் சேதுபதி நடிக்கும் ஜவான் படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். அவ்வாறு தன் சைஸிற்கு மீறிய வில்லத்தனமான நடிப்பாலும் , கம்பீரமான குரலாலும் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சூப்பர் ஸ்டார் பட்டத்தால் ஓயாத அக்கப்போர், ஆண்டவர் கொடுத்த பதிலடி.. அட இது ஏன் ரஜினிக்கு தோணல!

Trending News