வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

சிம்புவை வைத்து படம் எடுத்து காணாமல் போன 5 பேர்.. தலையெழுத்தை மாத்தி எழுதிய ஒரே இயக்குனர்

Actor Simbu: திரையுலகில் சிம்புவின் மீது ஏகப்பட்ட புகார்கள் எழுந்தாலும் தற்போது மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தனது செகண்ட் இன்னிங்ஸை துவங்கி இருக்கிறார். சிம்பு இப்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது படத்தை கமல் தயாரிப்பில் நடித்து வருகிறார். தற்போது பக்குவப்பட்டு இருக்கும் இவர் இதற்கு முன்பு ஐந்து பேரின் சினிமா கேரியரை ஊற்றி மூடிவிட்டார். ஆனால் ஒரே ஒரு இயக்குனர் மட்டும் எஸ்கேப் ஆகி தன்னுடைய தலையெழுத்தை மாற்றிக்கொண்டார்.

சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தின் தயாரிப்பாளர் பி.எல். தேனப்பா முன்னணி தயாரிப்பாளராக இருந்தாலும் இந்தப் படம் தான் அவருக்கு வசூல் ரீதியாக பேரிழப்பை தந்தது. இதன் பின்பு அவர் துரை, அய்யனார், பேரன்பு போன்ற படங்களை தயாரித்தார். சிம்புவை தொட்ட ராசியோ என்னமோ இப்போது அவர் இருக்கிற இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டார்.

Also Read: தம்பி விளையாட்டா சொன்னத மொத்தமா நம்பிய சீமான் அண்ணன்.. முழு முக்காடு போட்டுட்டு ஓடிய சிம்பு

அதன் பின்பு சிம்பு நடித்த கெட்டவன் படத்தை இயக்கிய நந்து படத்தை பாதி வரை மட்டுமே கொண்டு சென்று, திடீரென எதிர்பாராத காரணத்தால் படத்தை தயாரிப்பாளர் தரப்பிலிருந்து நிறுத்திவிட்டார். பின்பு நந்து வேறு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் தற்போது வரை திணறி வருகிறார். இதன் தொடர்ச்சியாக சிம்பு மூன்று வேடத்தில் நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (AAA) படத்தின் தயாரிப்பாளர் எஸ் மைக்கேல் ராயப்பன், இந்த படத்திற்கு முன்பு ஏகப்பட்ட ஹிட் படங்கள் கொடுத்திருக்கிறார்.

ஆனால் AAA படத்திற்கு பின்பு இவர் ‘கீ’ என்ற ஒரே ஒரு படத்தை மட்டுமே தயாரித்து, அதுவும் படுதோல்வியாக அமைந்து இப்போது சினிமாவை வீட்டே காணாமல் போய்விட்டார். இதைத்தொடர்ந்து சிம்புவின் மன்மதன் திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் திரையில் ஓடியது. இருப்பினும் அந்தப் படத்தின் இயக்குனர் ஏஜே முருகனுக்கு இந்த படத்திற்கு பின்பு சினிமா பட வாய்ப்பு கிடைக்காமல் ஒதுங்கி விட்டார்.

Also Read: ஒரு வழியா வந்த விடிவு காலம்.. எஸ்.டி.ஆர் 48-க்கு அட்டகாசமாக தயாரான சிம்பு

பல வருடங்களாக சிம்பு இழுத்தடிக்கும் படம் தான் கொரோனா குமார். மாநாடு படத்திற்குப் பிறகு இந்த படத்தில் நடித்து தருவதாக கூறிய சிம்பு, இதன் பின் சம்பளத்தை உயர்த்தியதால் அவருக்கும் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு இப்போது படமே கைவிடப்பட்டிருக்கிறது.

இதில் மிகவும் பாதிக்கப்பட்டது கொரோனா குமார் படத்தின் இயக்குனர் கோகுல் தான். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்ற நம்பிக்கையில் கோகுல் இப்போது வரை காத்திருக்கிறார். இப்படி ஐந்து பேரின் சினிமா வாழ்க்கையில் விளையாடிய சிம்பு 2010 ஆண்டு இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வேட்டை மன்னன் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

Also Read: சிம்பு வீட்டு வாசலில் நிற்கும் பெரிய கியூ.. வேதாளத்தை பழையபடி முருங்கை மரத்தில் நல்ல ஏற வைக்கும் உலக நாயகன்

இந்த படத்தின் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து பொருளாதார சிக்கல் ஏற்பட்டதால் இறுதியில் அது கிடப்பில் போடப்பட்டது. எப்படியோ நெல்சன் சிம்புவிடம் இருந்து தப்பித்து சின்னத்திரையில் உதவி டைரக்டராக நுழைந்து இப்போது தளபதி, சூப்பர் ஸ்டார் போன்றோரின் படங்களை இயக்கும் முன்னணி இயக்குனராக உயர்ந்து நிற்கிறார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் வசூலில் பட்டையை கிளப்பியது.

- Advertisement -spot_img

Trending News