ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பிக் பாஸ் சீசன் 6ல் பாப்புலரான 5 பிரபலங்கள்.. வாய் மட்டும் இல்லைனா உன்னையெல்லாம் நாய் கவ்விக்கிட்ட போயிடும்

சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரிட் என்டர்டைன்மென்ட் ஷோ ஆனா பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களை சிறப்பாக நிறைவு செய்த நிலையில், தற்போது 6-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதனால் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் பாப்புலரான 5 பிரபலங்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது.

கதிரவன்: விஜேவாக ரசிகர்களிடம் பரீட்சையமான இவர், பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் இந்த சீசனில் பெரிதாக எந்த கன்டென்டும் கொடுக்கவில்லை என்றாலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் பாப்புலரான டாப் 5 பிரபலங்களின் லிஸ்டில் 5-ம் இடத்தில் உள்ளார்.

அமுதவாணன்: காமெடி நிகழ்ச்சிகளிலும், டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்ற இவர் சினிமாவிலும் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு இப்போது பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் கடும் போட்டியாளராக மாறிக் கொண்டிருக்கும் அமுதவாணன் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர்களின் லிஸ்டில் 4-ம் இடத்தில் உள்ளார்.

Also Read: பிக் பாஸ் வீட்டுக்குள்ளும் நடக்கும் சாதிய அடக்குமுறை.. கண்டுகொள்ளாமல் இருக்கும் கமல்

ரச்சிதா மகாலட்சுமி: சீரியல் நடிகையாக இளசுகளின் மனதை கவர்ந்த இவர், பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இன்னும் சிறப்பாக விளையாடலாம் என்னும் ரசிகர்களுக்கு இருக்கிறது. இருப்பினும் கவர்ச்சி நடிகையாக பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ரச்சிதா இந்த சீசனில் பாப்புலரான பிரபலங்களின் லிஸ்டில் 3-ம் இடத்தில் உள்ளார்.

ஜனனி: இலங்கையை சேர்ந்த தொகுப்பாளினியான இவர் ஏகப்பட்ட ரசிகர்களை வளைத்து போட்டு இருக்கிறார் இவருடைய இலங்கைத் தமிழ் கலந்த கொஞ்சல் பேச்சு பலரையும் மயக்க வைக்கிறது இந்த சீசனில் ஆறுமை உருவாகி இருக்கிறது என்று சொல்லலாம் அந்த அளவிற்கு ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி 2-ம் இடத்தைப் பிடித்திருக்கிறார்.

Also Read: ஜனனி பிக் பாஸ் வீட்டில் வாங்கிய சம்பளம்.. புறம் பேசியதற்கு அள்ளிக் கொடுத்த விஜய் டிவி

அசீம்: சீரியல் நடிகராக சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமான இவர் தான் இந்த சீசனின் கன்டென்ட் கொடுக்கும் கண்டஸ்டன்ஸ் ஆவார். இவர் சக போட்டியாளர்களுடன் சண்டை போடுவதும், வாயாடுவதும் தான் இந்த சீசனில் அதிகமாக காட்டப்பட்டிருக்கிறது.

ஆகையால் இவருடைய வாயால் தான் தற்போது ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாகி வாரவாரம் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெறுவதுடன், அதிக ஓட்டுகளையும் பெற்று முன்னிலை வகிக்கிறார். ஆகையால் இந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆகுவதில் இவருக்கும் விக்ரமனுக்கும் தான் அதிக போட்டி நிலவுகிறது. எனவே பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் மூலம் பாப்புலரான டாப் 5 பிரபலங்களின் லிஸ்டில் இவர் முதல் இடத்தில் இருக்கிறார்.

Also Read: கயல் முதல் பாக்கியலட்சுமி வரை.. இளசுகளின் இஷ்டமான டாப் 5 சின்னத்திரை நடிகைகள்

இவ்வாறு இந்த 5 பிரபலங்களும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி சீரியல் நடிகர் அசீமுக்கு மட்டும் வாய் மட்டும் இல்லை என்றால் நாய் கவ்விக்கிட்ட போய்விடும் என்று இந்த லிஸ்ட்டை பார்த்து நெட்டிசன்கள் கமெண்ட் செய்கின்றனர்.

Trending News