செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

பிரியங்காவின் அராஜகத்தால் பாதிக்கப்பட்ட 5 தொகுப்பாளினிகள்.. கருவேப்பிலை மாதிரி தூக்கி எறிந்த விஜய் டிவி

Priyanka Deshpande: விஜய் டிவி பொருத்தவரை எக்கச்சக்கமான நிகழ்ச்சிகள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் மக்களை பொழுதுபோக்கும் நிகழ்ச்சியாக பெயர் வாங்கி வெற்றி பெற்று வருகிறது. ஆனால் இதற்கு அடித்தளமாக இருந்த சில தொகுப்பாளினிகள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடும் அளவிற்கு தற்போது இருக்கும் தடம் தெரியாமல் போய்விட்டார்கள்.

அதற்கு காரணம் பிரியங்கா நுழைந்த பிறகு செய்த நரி தந்திரத்தாலும் மறைமுகமாக அராஜகம் பண்ணி ஒவ்வொருவரையும் காலி பண்ணி விட்டார் என்பது கொஞ்சம் கொஞ்சமாக வெட்ட வெளிச்சமாகி வருகிறது. அந்த வகையில் பிரியங்காவால் பாதிக்கப்பட்ட ஐந்து தொகுப்பாளர்களை பற்றி எந்தவித கவலையும் படாமல், காரியம் முடிந்ததும் கருவேப்பிலை மாதிரி விஜய் டிவி சேனல் தூக்கி எறிந்து விட்டது.

டிஆர்பிக்காக பிரியங்காவை தலையில் தூக்கி வைத்தாலும் விஜய் டிவி

ஏனென்றால் விஜய் டிவி பொருத்தவரை தற்போது யார் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். யார் மூலம் டிஆர்பி ரேட்டிங் அதிகரிக்கிறது என்பதை வைத்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த வகையில் எதை எப்பொழுது செய்தால் நம்மால் நீடித்து நிற்க முடியும் என்பதை தந்திரமாக யோசித்து பிரியங்கா இதுவரை காய் நகர்த்தி வந்திருக்கிறார்.

டிடி: முதல் ஆளாக பலியானது டிடி தான். டிடி தான் விஜய் டிவியின் பில்லர் என்று சொல்லும் அளவிற்கு அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த மக்களையும் விஜய் டிவி பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். இதை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக கொடுத்து விஜய் டிவி சேனலை தூக்கி நிறுத்தினார். ஆனால் பிரியங்கா வந்த பிறகு டிடி மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்ததால் விஜய் டிவி சேனல் இவரை கண்டுக்காமல் போய்விட்டது.

பாவனா: மாகாபா உடன் பாவனா சேர்ந்து விஜய் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொடர்ந்து வெற்றிகரமாக கொண்டு வந்தார். ஆனால் முதன்முதலாக பிரியங்கா இதில் நுழைந்த பிறகு பாவனாவுக்கு பேசுவதற்கு வாய்ப்பை கொடுக்காமல் டம்மியாக்கியே வந்தார். இதனால் கோபப்பட்ட பாவனா உங்க சங்கார்த்தமே வேண்டாம் என்று சொல்லி விஜய் டிவியை விட்டு ஒதுங்கி விட்டார்.

ஜாக்குலின்: இவருடைய குரல் கிண்டல் பண்ணும் அளவிற்கு இருந்தாலும் அதுவே பிளஸ் பாயிண்ட் ஆக விஜய் டிவி ஏற்றுக்கொண்டு கலக்கப்போவது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு சான்ஸ் கொடுத்தது. ஆனால் அதிலும் பிரியங்கா உள்ளே நுழைந்து ஜாக்குலின் வாய்ப்பை தட்டி பறித்து விட்டார். இதனால் இவர்களுடன் முட்டி மோத முடியாது, அதற்கான வேலையும் நம்மளுடையது இல்லை என்று ஜாக்லின் டீசன்டாக ஒதுங்கி விட்டார்.

ரம்யா சுப்ரமணியன்: இவர் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம் மற்றும் ஸ்டார் விஜய் சேனலில் கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் பிரியங்கா டிரெண்டிங் ஆகி கொண்டிருக்கிறார் என்று தெரிந்ததும் ரம்யாவை கழட்டிவிட்டு பிரியங்காவிற்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கொடுக்கப்பட்டதால் ரம்யா, விஜய் டிவி சேனலை விட்டு விலகி விட்டார்.

மணிமேகலை: சன் மியூசிக் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளனியாக வந்த இவர் கிட்டதட்ட 15 வருடமாக தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை கோமாளியாக குக் வித் நிகழ்ச்சியில் அனைவருடைய அன்பையும் சம்பாதித்திருக்கிறார். அப்படிப்பட்டவர் இந்த ஆண்டு தொகுப்பாளனியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

ஆனால் இதில் பிரியங்கா போட்டியாளராக கலந்து கொண்டாலும் மனதிற்குள் நாம் தான் பெரிய ஆளு என்பதற்கு ஏற்ப நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் மூக்கை நுழைத்து பல பிரச்சினைகளை செய்திருக்கிறார். இதனால் பலமுறை மணிமேகலை அவருக்கு நடக்கும் பிரச்சினையை எடுத்துரைத்திருக்கிறார். ஆனால் சேனல் தரப்பிலும் சரி, பிரியங்காவும் கண்டு கொள்ளாததால் கடைசியில் இந்த நிகழ்ச்சியை விட்டு நான் பாதியிலேயே வெளியேறுகிறேன்.

இனி தொடர்ந்து தொகுத்து வழங்க முடியாது என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி விட்டார். ஆனாலும் இவ்வளவு விஷயங்கள் நடந்த பிறகும் பிரியங்கா தான் எங்களுக்கு முக்கியம். அவர் இருந்தால்தான் விஜய் டிவிக்கு டிஆர்பி ரேட்டிங் அதிகரிக்கும் என்று மற்ற தொகுப்பாளர்களின் உதாசீனப்படுத்தும் விஜய் டிவி இருக்கும் வரை பிரியங்கா மாறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று மக்கள் கமெண்ட்ஸ் பண்ணி வருகிறார்கள்.

Trending News