செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

அதிக வருடங்கள் ஆட்சி செய்த 5 பிரதமர்கள்.. நரேந்திர மோடிக்கு எத்தனாவது இடம் தெரியுமா?

Does Narendra Modi know any place?: இந்திய ஜனாதிபதியால் நியமிக்கப்படும் பிரதம மந்திரி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நேரடியாக தேர்ந்தெடுக்கும் பெரும்பான்மையான மக்களவை உறுப்பினர்களின் நம்பிக்கையே பெற்ற பின் பிரதமராக பாராளுமன்ற அரசாங்கத்தின் தலைமையை நிர்வாகம் செய்யக் கூடியவர். அந்த வகையில் ஒரு நாட்டின் தலையெழுத்தை மாற்றும் உரிமை இவர்களிடம் இருக்கிறது என்றே சொல்லலாம்.

அப்படி இப்பொழுது வரை 15 பிரதமர்கள் ஆட்சி புரிந்து இருக்கிறார்கள். இதில் சுதந்திரத்தைப் பெற்ற பிறகு முதன்முதலாக பிரதமராக பதவி ஏற்றவர் ஜவஹர்லால் நேரு. இவர் 1947 ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியில் 16 ஆண்டுகளாக இவருடைய சேவையை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்.

10 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்யும் நரேந்திர மோடி

இவரை தொடர்ந்து 1966 முதல் 1977 ஆம் ஆண்டு மற்றும் 1980 முதல் 1984 வரை கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக இந்திரா காந்தி காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி இருக்கிறார். அடுத்ததாக மன்மோகன் சிங் 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் நிர்வாகம் செய்திருக்கிறார்.

அடுத்து அடல் பிகாரி வாஜ்பாய் பாரதி ஜனதா கட்சியில் 1996 முதல் 1998 மற்றும் 2004 வரை கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக தலைமை வகுத்திருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து தற்போது 15 வது பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று இருக்கிறார்.

2014 ஆம் ஆண்டு ஆரம்பித்த இவரின் அரசியல் வாழ்க்கை தற்போது வரை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டு வருகிறது. அந்த வகையில் பாரதி ஜனதா கட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேல் அதிக வருடங்களாக ஆட்சி செய்த பிரதமராக மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

Trending News